149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி நகர்கோட்டி அசத்தினார்

149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி நகர்கோட்டி அசத்தினார்.

அவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசினை ராஜஸ்தான் அரசு வழங்கியது.

நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர்களில் ராஜஸ்தானின் கம்லேஷ் நகர்கோட்டியும் ஒருவர். இவர் சீனியர் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுவதுபோல் 149 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசி அசத்தினார். ஒரு ஓவரில் ஒரு பந்தை மட்டும் அப்படி வீசவில்லை. சராசரியாக 140 கிலோ மீட்டருக்கு அதிகமாக வேகத்தில் வீசி அச்சுறுத்தினார்.

6 போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, நகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டசபையில் பட்ஜெட் குறித்து பேசுகையில், நகர்கோட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், இந்த பரிசுத் தொகையையும் வழங்கியுள்ளார்.