ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: இந்தியர் உள்பட 4 பேர் பலி

ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தியர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா நகரில் உள்ள அல் புதீனா என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒரு இந்தியர், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

8 பேர் தீ விபத்தால் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.