டிசம்பருடன் முடிந்த 3 மாதத்தில் இந்தியன் வங்கி வருவாய் ரூ.4903 கோடி

கடன், லாபம் அதிகரிப்பு: வராக்கடன் வசூல் தீவிரம்: நிர்வாக இயக்குனர் கிஷோர் காரத் தகவல்

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னணி

சென்னை, பிப். 13–

இந்தியன் வங்கி, கடந்த 2017 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.4,903 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. நிகர லாபம் ரூ.303 கோடியாக (18.42%) அதிகரித்துள்ளது. இது வழங்கிய கடன் அதிகரித்துள்ளது. வங்கி டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ளது என்று நிர்வாக இயக்குனர் கிஷோர் காரத் தெரிவித்தார்.

இந்தக் காலாண்டில் வங்கியின் நிகர லாபமானது ரூ. 303.06 கோடியை அடைந்தது. டிசம்பரோடு முடிவடைந்த 9 மாத காலத்தில் நிகர லாபமானது 3.78% வளர்ச்சி கண்டு ரூ. 1127.01 கோடியை அடைந்தது. இது முந்தைய ஆண்டு (31.12.2016) இதே காலகட்டத்தில் ரூ. 1085.98 கோடியாக இருந்தது.

இவ்வங்கியின் மொத்த வருவாயானது ரூ.4903.08 கோடியை அடைந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 7.59% வளர்ச்சி அடைந்துள்ளது. இது 31 டிசம்பர், 2016 அன்று முடிவடைந்த காலாண்டில் இது ரூ. 4557.26. கோடி. 9 மாத காலத்தில் இது ரூ. 14565.29 கோடியாகும். மொத்த டெபாசிட்டுகளின் அளவு 12.46% வளர்ச்சி கண்டு டிசம்பர் 2017ல் ரூ. 2 லட்சத்து6 ஆயிரத்து 533 கோடியாக இருக்கிறது.

டிசம்பர் 31ந் தேதி அன்றுள்ளபடி வங்கியின் உள்நாட்டு டெபாசிட்டுகள் 6.09% வளர்ச்சி கண்டு, மொத்த உள்நாட்டு டெபாசிட்டுகளுக்குமான விகிதத்தில் 36.49% முன்னேற்றம் கண்டுள்ளது.

வங்கி வழங்கிய கடன் ரூ. 1,53,120 கோடியாகும். இது (ரூ. 1,25,858 கோடி) விட 21.66% வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றுள் வீட்டுவசதிக் கடன் 23.12%, வாகனக் கடன் 28.96%)} விவசாயக் கடன் 21.48%, சிறுகுறுந்தொழில் 38.35% . கார்பரேட் கடன்கள் 13.97% வெளிநாடுக் கடன்கள் 26.37%

டிசம்பர் 31, 2016ல் ரூ. 50025 கோடியாக இருந்த முன்னுரிமைக் கடன்களின் தொகை, டிசம்பர் 31, 2017ல் `58756 கோடி என்பதாக வளர்ச்சியடைந்துள்ளது.

டிசம்பர் 31, 2016ல் ரூ.14759 கோடியாக இருந்த நலிந்த பிரிவினருக்கான கடன்களின் தொகை, டிசம்பர் 31, 2017ல் ரூ.15835 கோடி என்பதாக வளர்ச்சியடைந்துள்ளது.

ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJ BY) திட்டத்தின் கீழ் 8.82 லட்சம் கணக்குகள் திறக்கப்பட்டன.

பிரதமரின் முத்ரா யோஜனா (நிதியாண்டு 2017–-18–ல் ரூ.1361.65 கோடி எனும் அளவிற்கு சிஷு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய திட்டங்களின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 372.34 கோடி எனும் அளவிற்கு நிதியுதவியளிக்க உறுதி வழங்கப்பட்டது.

அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தை செயல்படுத்தலில் நிர்ணயிக்கப்பட இலக்கை அடைந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுள் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.