சிவபெருமானை உமையவள் வழிபட்ட “சிவராத்திரி” வரலாறு

மதுரை,பிப் . 13 –
உலகையும் உலக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டி சிவபெருமானை
உமையவள் வழிபட்ட நாளே  “சிவராத்திரி” ஆகும்.
“சிவராத்திரி”   வழிபாடு வந்த வரலாறு பற்றிய விபரம் வருமாறு:–
ஒருகாலத்தில் உலகம் முழுவதம் பிரளயம் உண்டாயிற்று. அனைத்து உயிரனங்களும் அழிந்து போயிற்று. அவை அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை தன் வசம் வைத்திருந்த சிவபெருமான் வசம் ஒடுங்கிவிட்டது. உயிரினங்கள் ஒன்றும் உலகில் இல்லை.
எனவே சிவபெருமானின் துணைவியர் பார்வதிதேவி தன் கருணை உள்ளத்தால் இந்த அண்டங்கள் தோன்றி உயிரினங்கள் உண்டாகி உலகம் இயங்க சிவபெருமானை நோக்கி தியானம் செய்தார். அவரது தியானத்தை புகழ்ந்து அவர் விருப்பப்படியே மறுபடியும் உலகில் உயிரினங்கள் பெருக அருள் செய்தார். அப்பொழுது உமையவள், சிவபெருமானிடம் தங்களை நான் தியானம் செய்த இந்த பொழுது “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும். உங்களை மனதில் நினைத்து இந்த நாளில் விரதம் காத்து, இரவு கண் விழித்து வழிபடுபவர்கள் அனைத்து நலன்களும் பெற்று முக்தி பெற அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுதலை ஏற்று சிவபெருமான் அருளிய தினமே சிவராத்திரி.
மாசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளிலேயே பார்வதி தேவி, சிவபெருமானை நோக்கி தியானம் செய்த நாள். முதல் முதலில் சிவபெருமான் அருளிய வரத்தை நந்தியம் பெருமானும்  சன காதி முனிவரும் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து முக்தி பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.
எனவே புனிதமான இந்த நாளில் விரதம் காத்து ஆறுகாலமும் சிவபெருமானை நினைத்து சிவாலயம் சென்று வழிபட்டால் நல்ல ஆரோக்கியம், சிறப்பாக நல்ல சிந்தனை, பொருளதார வளர்ச்சி, கருணை உள்ளம், திருப்தியான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். வயோகிதர்களும் பிணியாளர்களும் இந்த விரதத்தை ஆலயம் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே தியானம் செய்தாலும் பலன் உண்டு. குறைந்தது 100 முறையாவது “சிவாய நம ஓம்” உச்சரித்தால், நல்ல வாழ்வு கிட்டும் என்பது நிச்சயம்.
இவ்வாறு “சிவராத்திரி”   வழிபாடு  வரலாறு கூறுகிறது.