சிங்கப்பூர் ஏற்றுமதி சரிவை மீட்டது: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை ,பிப் .13 –
சிங்கப்பூர் ஏற்றுமதி  சரிவை மீட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் வந்துள்ளதால், அய்யலூர் மார்க்கெட்டில் தக்காளி கொல்முதல் விலை சற்று உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், கோபால்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்பட பல பகுதிகளிலும் தக்காளி சாகுபடியாகிறது. முதலீடு, பராமரிப்பு செலவு குறைவு, லாபம் தரக்கூடிய பயிர் என்பதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் அதனை பயிரிடுகின்றனர். சில நேரங்களில் கடும் விலை வீழ்ச்சி அடைந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் விலை உச்சத்திற்கு சென்று லாபம் பார்க்க முடிவதால் மனம் தளராமல் தொடர்ந்து தக்காளி பயிரிடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து 15 கிலோ வீரிய ரக தக்காளி பெட்டி ரூ.40க்கு விலை போனது. இந்நிலையில் சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு ஆர்டர் கிடைத்து விலை சற்று உயர்ந்துள்ளது. அய்யலூர் மார்க்கெட்டில் கடந்த இரு நாட்களாக பெட்டி ரூ.70 முதல் 120 வரை ஏலம் போனது.