கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து- 5 பேர் பலி

கொச்சி,பிப்.13–

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர் பூஷண் கப்பலில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.