கிண்டியில் அலுவலக இடங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியுடன் ‘‘ஸ்மார்ட் ஒர்க்ஸ் மையம்’’

சென்னை, பிப். 13–
பகிர்ந்துகொள்ளப்படும் பணி அமைவிடங்களை வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ஸ்மார்ட்ஒர்க்ஸ், சென்னையில் கிண்டியில் அதன் முதல் பகிர்ந்துகொள்ளப்படும் பணி அமைவிட மையத்தை தொடங்கியிருக்கிறது.
900 இருக்கை வசதிகளுடன் 45 ஆயிரம் ச.அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிக நவீன வளாகமானது, உலகத்தரம் வாய்ந்த பணி அமைவிட வடிவமைப்பையும் மற்றும் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பரிமாறும் சிற்றுண்டியகம், கேமிங் அறை, உடற்பயிற்சியகம், மருத்துவ அறை, சந்திப்புகளுக்கான அறைகள், கருத்தரங்கு, லவுஞ்ச், கன்சியார்ஜ் சேவைகள், மாதத்திற்கு இருமுறை சமூக நிகழ்ச்சிகள் போன்ற பல வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன் பணி அமைவிடத்தை சிக்கலில்லாத இடமாக ஆக்குவதற்கும் மற்றும் அதில் பணிபுரியும் நபர்களின் செயல்திறனை மேம்படுத்த உதவவும் வேறு பிற வசதிகளையும் இது கொண்டிருக்கிறது என்று ஸ்மார்ட்ஒர்க்ஸ்-ன் நிறுவனர் நித்திஷ் சர்தா தெரிவித்தார்.
தற்போது 9 நகரங்களில் 16 மையங்களுடன் தற்போது ஸ்மார்ட்ஒர்க்ஸ் கொண்டுள்ளது. சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் இதன் முதல் மையமானது, பெருநிறுவனங்களுக்கு மட்டுமின்றி சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் உகந்த குவிமையமாக திகழும் கிண்டியில் அமைந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் அடுத்த மையமானது, பழைய மகாபலிபுரம் சாலையில் மற்றுமொரு நவீன பணி அமைவிடம் அமையவிருக்கிறது.
இணை நிறுவனரான ஹர்ஷ் பினானி பேசுகையில், இதற்கு ரெடிங்டன் இந்தியா, மோர்கன் கீரிவ்ஸ் காட்டன் போன்ற நிறுவனங்கள் அடங்கிய வலுவான வாடிக்கையாளர் அடித்தளத்தை ஏற்கனவே பெற்றிருக்கிறது.
சென்னை நகரம் மட்டுமின்றி, குறிப்பாக மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்கள் உட்பட தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய இது திட்டங்களை கொண்டிருக்கிறது என்றார்.