டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பேட்டரியில் ஓடும் எலக்ட்ரிக்: ஆட்டோ கிரீவ்ஸ் காட்டன் அறிமுகம்

சென்னை பிப். 12–

பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு என்ஜின் தயாரிக்கும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் மின் ஆட்டோ, டீசல், கியாசில் ஓடும் ஆட்டோ போன்றவற்றை மாசு வெளியிடாத உலக தர வாகனங்களை டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நாகேஷ் பசவன்ன ஹள்ளி பேசுகையில், இந்த 2 ரக வாகனங்களும் சிக்கன எரிபொருளில் இயங்கும். கடும்புகை வெளியிடாது. பாரத் –4 ரக அதிகபட்ச தர கட்டுப்பாடுக்கு ஏற்றதாக இந்த வாகனங்கள் இயக்கும் என்றார். மேலும் ஆட்டோ, மினி ஷேர் ஆட்டோ, 4 சக்கர வாகனங்கள் தயாரிக்கும் 30 நிறுவனங்களுக்கு இதன் என்ஜின்களை விற்பனை செய்கிறது என்றார் அவர்.

இது தயாரிக்கும் பல்வேறு ரக நவீன டர்போ குளிரூட்டும் என்ஜிகளை கண்காட்சியில் வைத்துள்ளது. கிரீவ்ஸ் காட்டன், விற்பனைக்கு பின் சேவைக்கு “கிரிவ்ஸ் கேர், என்னும் பிரிவை நாடு முழுவதும் அறிமுகம் செய்து உள்ளது. நவீன என்ஜின் அறிமுகம், விற்பனைக்கு பின் சேவை அதிக வாகனங்கள் விற்பனைக்கு ஊக்கமளிக்கும் என்றார்.

அமெரிக்க பின்னகிள் கூட்டுடன் கியாஸ் மற்றும் பெட்ரோலில் ஓடும் ஆட்டோவில் இரட்டை பிஸ்டன் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது உள்ள ஆட்டோக்களை விட 30% சிக்கின எரிபொருளை இந்த ஆட்டோ பயன்படுத்தும். உலகத்தர மாசு கட்டுப்பாடு முறைகளுக்கு ஏற்ப நடைபெறும் என்றார் அவர்.

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பாகங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 3 வாட் திறனில் குறைந்த எடையில் விரைவாக செல்ல மின் மின் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்துக்கு 6 வருட வாரண்டி உள்ளது. இதன் விலை விரைவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து புதிய கண்டெடுப்புகளை கண்டுபிடித்து வாடிக்கையாளர்களை கவர்வோம் என்றார் அவர்.