பயண உதவி

சந்திரன் அலுவலக வேலையாக கோவை சென்றிருந்தான். அவன் எப்போது சென்றாலும் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்குவதையே வழக்கமாக வைத்திருந்தான். அது சௌகரியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வந்தான் வழக்கம் போலவே அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்கினான்.
சார், காபி, டீ, ஏதாச்சும்… வாட்ச்மேன் சுகுமார் அக்கறையாய் விசாரித்தார்.
“இல்லங்க நான் கேக்குறனே” மனிதர்களை மனிதர்களாகவே மதிக்கும் மாண்பு கொண்டவன் சந்திரன், அவன் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை எப்போதும் பார்ப்பதில்லை. எல்லா உயிர்களும் எப்போதும் சமமென்ற நிலையிலேயே இருப்பான். சுகுமாரும் அப்படித்தான் அங்க வேலை பார்க்கும் அத்தனை செக்யூரிட்டிகளும் அவனுக்கு தோழமையாகவே இருந்தார்கள்.
நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறவா?
“ஓகே சார், டிபன்,
“ம்….. இட்லி, வடை பத்து மணிக்கு “
“ஓகே சார் சுகுமார் விடை பெற்றார்.
சந்திரன் காலைக் கடன்களை முடித்துவிட்டு, சிறு நேரம் ஓய்வெடுத்தான்
“சார் டிபன், என்ற சத்தத்தோடு வந்து நின்றார் சுகுமார்.
“தேங்ஸ் “
“சார் லஞ்ச்”
“ஓகே, வாங்கிருங்க ஒங்களுக்கும் சேத்து, அன்புக் கட்டளை இட்டான்
வெஜ்ஜா, நான் வெஜ்ஜா,
“எது நல்லாயிருக்குமோ அது, சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் சந்திரன்
“சார் ஒர்க் இங்கயா?
வெளியவா?
அப்படின்னா ஒரு ஒண்ணரைய போல டிபன் வாங்கிட்டு வரவா?
“ஓ.கே” சொல்லி விட்டு அலுவலக விசயமாக வெளியேறினான். பணிகள் முடித்து மதியம் வந்த போது மதிய உணவு தயாராக இருந்தது.
“சார் லஞ்ச் “
“ம்” நீங்க சாப்பிட்டீங்களா?
“சாப்பிட்டேன் சார். சுதாகர் வெளியே சென்றார். மதிய உணவை முடித்த சுந்தர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தான்.
மதிமயங்கும் மாலை நேரம்
சார் டீ, என்ற சத்தத்தோடு வாசலில் நின்றார் சுதாகர் தேங்ஸ்
சார் நைட்டு கௌம்புறீங்களா?
“எஸ்”
“அப்பிடின்னா நம்ம கார் போகுது அதுல போறீங்களா?
“அப்படியா?”
“ஆமா சார்”
நம்ம கார்ல போனீங்கன்னா டைம் மிச்சம் தான?
அப்பிடீங்கிறீங்களா?
எஸ்,
கௌம்பி ரெடியா இருக்க சொல்லி விட்டுச் சென்றார் சுதாகர்
சந்திரன் வேலைகளை முடித்துவிட்டு அலுவலக காரில் ஏறத் தயாராக இருந்தான் காரும் வந்து சேர்ந்தது.
அலுவலகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கார் நின்றிருந்தது.
சந்திரன் தன் பொருட்களை எடுத்து வைத்து வெளியேறினான். சந்திரன் வருவதற்குள் அந்தக் கார் சட்டெனக் கிளம்பியது.
என்ன லூசா இருப்பானுக போல வண்டியில ஏற்றதுக்குள்ள இப்படி எடுத்துட்டு போயிட்டானுகளே வருத்தப்பட்டான், சந்திரன் இங்க எல்லாப் பயலுகளும் இப்படித் தான் சார் அவனவன் சுயநலமாக தான் இருப்பானுக சுதாகர் சொன்னதும் சந்திரனுக்கு சூடானது. மனுச தன்மையே இல்லாத ஆளுகளா இருப்பானுக போல, முட்டாள் பயக இப்படி விட்டுட்டுப் போயிட்டானுகளே இவனெல்லாம் மனுஷங்களா? வௌங்க மாட்டானுக என்றபடியே அவனுடைய செல் நம்பருக்கு டையல் செய்தான்.
“என்ன சார் வாரீங்களா?
“என்னது வாரீங்களா?
“டேய் லூசாடா நீ இன்ன வரைக்கும் என்ன சொல்லிட்டு இருந்தோம் லூசுப் பயலாடா நீ திட்டினான் சந்திரன்
சார் வாங்க என்ற வண்டிக்காரனை நோக்கி விரைந்தான் தன் உடைமைகளை எடுத்துப் போன சந்திரன் வண்டிக்காரன் அங்கு இல்லாததைக் கண்டு திகைத்தான் எங்க ஆளக் காணோம்?
இங்க தான நிக்கிறேன்னு சொன்னான் சந்திரனுக்கு கோபம் தலைமுட்டியது என்ன இது லூசா இருப்பானுக போல வரச்சொல்லிட்டு இப்படி பண்றானுகளே
திட்டிய சந்திரன்
ஆமா சார் இவனுகளுக்கு மனுசங்களோட மரியாதையே தெரியாது சார் பாருங்க சொல்லிட்டாவது போகலாமே?
“ம்”
யாரோ அவங்க சொந்தக்காரங்கள ஏத்திட்டு போறானுக போல இருக்கட்டுமே அவங்க மடியிலயா ஒக்காரப் போறேன்
இப்படித்தான் நெறயாப்பேரு இருக்கானுக ஏதோ நல்லதுன்னு நெனச்சுக்கங்க சதாகர் தேற்றினாலும் சந்திரனின் மனது சஞ்சலத்தில் உறைந்து கிடந்தது
“ச்சே…. நம்மோட மரியாதை அவ்வளவு தானா? இங்க மனுசங்களோட மதிப்பு இவ்வளவு தான் போல
மனசுக்குள் மறுகிக் கொண்டே இருந்தான் சந்திரன் விடுங்க சார் அவன் போனாப் போறான் நீங்க பஸ்ல போங்க முன்மொழிந்தார், சுதாகர்
திட்டியபடியே சென்றான் சந்திரன் அன்று இரவு ஒரு பெரிய அதிர்ச்சி அவன் செவிகளை வந்து சேர்ந்தது. என்னது உண்மையாவா சுதாகர்
“ஆமா சார், நீங்க அந்த கார்ல போகாம இருந்தது நல்லது. இருந்தாலும் பாவம்தான், அப்பிடியில்ல சார், நம்மள விட்டுட்டுப்போறது நமக்கு கெடைக்காம இருக்கிறது எல்லாமே ஒருவிதத்தில் நல்லது தான். இப்பப்பாரு அந்தக் கார் ஆக்சிடண்ட் ஆயிருச்சு பெருசா உயிர் சேதம் இல்லன்னாலும் இழப்பு இழப்புதான தேற்றினார் சுதாகர்.
தப்பு, நாமள அவன் கூட்டிட்டு போகலன்னாலும் நடந்தது விபத்து. அவங்களுக்காக பிரார்த்தனை பண்ணுவோம் நம்ம விட்டுட்டு கடந்து போற எல்லா விசயங்களும் நமக்கு நல்லது ஆனா நம்மள விட்டுட்டுப் போறவங்களும் நல்லா தான் இருக்கணும் என்ற சந்திரன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.
ராஜா செல்லமுத்து