வட்டி விகிதத்தில் மாற்றமில்லை :ஆர்பிஐ

ரெப்போ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகித்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 6 சதவீதமாகவே தொடரும். அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்தை எட்டும். வீடு, வாகன கடனுக்கான வட்டியிலும் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாததால் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, வீடு, வாகன கடன்களுக்கான வட்டியில் மாற்றம் இல்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார் வளர்ச்சி 6.7 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.</p>

2018–19 ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் மாதங்களில் உருவாகிவரும் பணவீக்க சூழலைப் பற்றி விழிப்புணர்வு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

photo 1