சண்டைக்காரி

சந்தியாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை தொற்றிக்கொள்ளும்.
“ஆமா நான் அப்படித்தான், இஷ்டம்னா பேசு, இல்ல விட்டுரு, பட்டென பேசுவாள்
“ஏய் சும்மா சொன்னேன்டி”
சும்மா சொன்னையோ
காசுக்குச் சொன்னனியோ
அதெல்லாம் எனக்கு தெரியாது.
சந்தியா நீ எப்பவுமே இப்படித்தானா?
“ஏன்?
ஒன்கூட பேச ஆரம்பிச்ச ரெண்டாவது நொடியிலயே சண்ட தொத்திக்கிருதே எப்படி?
“ம் அது நீ பேசுறத பொறுத்து இருக்கு
சந்தியா சத்தமே இல்லாமல் சொன்னாள்.
என்ன நான் பேசுறது தப்பா?
“ஆமா ….. நீங்க பேசுறது எல்லாமே தப்பு தான்,
“ஏய் …… ஒனக்கு அம்மா இல்லனதுக்கு, நான் கரிசனையா ஒன்கூட பேசுனது தப்பா?
ஆமா ….. எனக்கு அம்மா இல்லன்னா ஒங்களுக்கு என்ன பிரச்சினா?
எனக்கும் அம்மா இல்ல அதான்,
“ஏன் ஒங்களோட லைப்பையும் என்னோட லைப்பையும் கம்பேர் பண்றீங்க,
இல்ல சந்தியா நான் அம்மா இல்லாத கஷ்டத்த ஒணர்ந்திருக்கேன், அப்பிடித் தான் ஒன்னைய நெனைச்சேன.
“அதுக்கு எப்பவுமே அதப்பத்திதான் பேச்சா?
எனக்கு அதப்பத்தி பேசுறதே பிடிக்காது நீங்க என்னாடான்னா என்ன பாக்குற போதெல்லாம் அம்மா இல்லாத பொண்ணு தானன்று சொல்றது எனக்கு அவ்வளவு எரிச்சலா இருக்கு எங்க பேமிலில கூட அதப்பத்தி யாரும் கேக்க மாட்டாங்க
என்னோடஸ் கூல்ல யாரம் கேப்பாக்கூட கண்டந்துண்டமா
திட்டியிருக்கேன் நீங்க தான் என்கிட்ட எப்பவும் இதையே சொல்லிட்டே இருக்கீங்க
“சந்தியா”
“ம்”
நேத்து கூட எங்க அம்மாவ நெனச்சு அழுதேன்
நீங்க அழுங்க அதுக்கு நான் என்ன பண்றது
நீயென்ன கல்லா ஒனக்கு ஈரமே இல்லையா?
ஒங்களோட ஈரம், பாசம், அன்பெல்லாம் என் கிட்ட கொட்டணும்னு அவசியமில்ல, புரிஞ்சதா?
“ம் “
“என்ன நான் சொன்னது கேக்குதா?
“ஓ.கே சந்தியா,
“இங்க பாருங்க ஒங்க அம்மா இல்லங்கிறதுக்காக நீங்க சாகப் பேறீங்களா? நீங்க வாழத்தான போறீங்க சந்தியா திட்டிக் கொண்டிருந்தாள்.
“ச்சே எவ்வளவு அசிங்கமா போச்சுன்னு பாரு ஒனக்கு அம்மா இல்லன்னதும் கொஞ்சம் கேர் எடுத்திட்டேன் நீ என்னா டான்னா இவ்வளவு கேவலமா பேசிட்டு இருக்க.
நான் பேசப் பேச சந்தியா செவிமடுத்தாலேயொழிய சீறிதும் எனக்கு சாதகமாகப் பேசவில்லை
ஒங்கூட நான் பேசியிருக்கக் கூடாதோ?
ஒங்கூட நான் பழகியிருக்கக் கூடாதோ?
சந்தியாவின் நினைவுகளில் முழ்கி பேசிக் கொண்டிருந்தான்
“நீங்க எனக்கு இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்புறீங் தப்பா?
ஆமா …. ஒன்மேல கொஞ்சம் பாசம், அதான்
ஒங்களோட பாசம் நேசமெல்லாம் என்கிட்ட காட்டனும்னு அவசியமில்ல சரியா?
“ஓகே சந்தியாவுடன் பேச ஆரம்பித்த இரண்டொரு விநாடிகளிலே சண்டை ஆரம்பித்து.
இனிமே ஒன்கூட நான் பேச மாட்டேன்
நீங்க பேசுறீங்களோ?
பேசலையோ? எனக்கு தெரியாது நீங்க பேசாம இருக்கிறது தான் நல்லது அப்படியா?
“ஆமா பேசுறீங்க
தப்பு தப்பா பேசுறீங்க,
தெரியல நான் அப்படித் தான் பேசுவேன் அது தப்புன்னா ஸாரி,
பேசுறதும் பேசிட்டு ஸாரி வேறயா?
இருவரும் விடாமல் சண்டை போட்டுக் கொண்டே இருந்தோம், செல்போன் சூடாகி வெடித்து விடும் போல இருந்தது.
சந்தியா வச்சுவரா?
“ஓ.கே.”
ஒங்கூட தெனமும் பேசும் போது சுமுகமாக பேச முடியல
எப்பவும் சண்ட தான் வருது நீ வீட்டுல எப்படி இருப்ப?
“ம் நீங்க வீட்டுக்கு வந்து பாருங்க ,
இல்ல கேட்டேன்மா
“வீட்டுக்கு வந்து பாருங்க”
“கேட்டது தப்பா?
“ஆமா” என்னைய எப்படி நீங்க கேக்கலாம், என்னையப் பாத்த சண்டக்காரி மாதிரி தெரியுதா?
மீண்டும் சண்டையைப் போட ஆரம்பித்தாள்
ஐயய்யோ ஆரம்பிச்சிட்டாளே இவகூட பேசாமலே இருக்கலாமா? முடிவெடுத்தேன்.
“சந்தியா”
“ம்”
“இனிமே உன்கூட பேச மாட்டேன் “
“ஓ.கே”
“ஏன்னா தெனந்தோறும் ஒன் கூட பேசிப்பேசி சண்ட வருது இனிமேஒங்கூட பேசுறதில்ல”
முடிவெடுத்து போனைக் கட்செய்தேன்.
அன்று இரவு முழுவதும் ரணமாய்க் கழிந்து பகல் முழுவதும் வெப்பமாய் உறைந்தது. அன்று இரவு மீண்டும் சந்தியாவிடமிருந்து போன்
ஐயய்யோ மறுபடியும் சண்டையா? வியப்பின் விளிம்பில் போய் உட்கார்ந்தேன்.
“டிரிங்…. டிரிங்.”..
“டிரிங்….. டிரிங்… சத்தம் என் காதைக் குடைந்தது.
“எடுக்கலாமா?”
“வேண்டாமா?” இரண்டு விதமான கருத்துக்கள் என்னுள் வரவே சந்தியாவின் போன் ரிங்காகிக்கொண்டிருந்தது.