காதலியின் காதல்

கீர்த்திக்கு ஒரு ரசிகர் மன்றமே அந்தக் கல்லூரியில் இருந்து. அவள் நடை, உடை, பாவனை என அளவெடுத்துக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள் .
கீர்த்தியைப் பார்த்தால் அவர்களுக்கு ஒரு கிறக்கமே ஏற்படும். சராசரி அழகை விட சற்றே அதிகமாயிருந்தாள் . அதுதான் மற்றவர்களை விட அவளைக் கொஞ்சம் வேறுபடுத்திக் காட்டியது.
அன்புவிற்கு அவள்மீது அலாதி விருப்பம் ;அவள்மீது கொஞ்சம் பாசம் அதிகமாகவே வைத்திருந்தான்
அவன் .
அவன் நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தெரிந்தது. கீர்த்தியின் கிரகணம் முழுவதும் அவனை ஆட்கொண்டது.
கீர்த்தி
“ம்”
இப்ப கிளாஸா ஒங்களுக்கு
“எஸ்” ஏன் கேக்குறீங்க?
“ஜஸ்ட் சும்மா”
“இல்ல சொல்லூங்க”
சினிமாவுக்கு போகலாமா?
“என்னது?
“ஒண்ணுல்ல”
இல்ல , இப்ப என்னமோ சொன்னீங்களே
“இல்ல”
என்னமோ சொன்னீங்க, ஆனா திரும்ப சொல்ல மாட்டீங்க.
கீர்த்தி விடுவதாகத் தெரியவில்லை ;அன்பு அதை அப்படியே சமாளித்தான்.
ச்சே இவகிட்ட ஏதாவது ஏடா கூடாமச் சொல்லி மாட்டிக்கிருவமோ? பயத்தின் பிடியில் போனவன் கொஞ்சம் இப்போது தான் தளர்ந்தான்.
“சரி போகலாமா?
“ம்”
“பிரீயா இருந்தா கூப்பிடு”
“ஓ.கே, என்ற வார்த்தைகளோடு இருவரும் பிரிந்தனர்.
“யப்பா…. இவ என்னா இப்படி இருக்கா? ஒரு வார்த்த பேச முடியாது போல. எதப் பேசுனாலும் புடிச்சுக்கிறாளே. இவ உண்மையிலே நல்ல பொண்ணா ,கெட்டவளா? இவள நாம காதலிக்கலாமா? இல்ல வேணாமா? நாம சொன்னா ஏத்துக்கிருவாளா? இல்ல திட்டுவாளா?
ஏதுவும் புரியாமல் புலம்பினால் அன்பு
இவகிட்ட எதுவும் சொல்லாமலே நம்ம காதல் ஒடஞ்சு போகுமோ? விரக்தியின் உச்சிக்குப் போய் விழித்துக் கொண்டிருந்தான், அன்பு நாட்கள் நகர்ந்தன அன்புவால் அவன் காதலைக் கட்டி வைக்க முடியவில்லை ஒரு நாள், கீர்த்தியிடம் நெருக்கத்தில் உட்கார்ந்தான்
“அன்பு
“ஸாரி”
“ஓகே…. ஒட்காரும் போது இது தெரியலையா?
விட்டா இடிச்சீட்டே ஒக்காருவீங்க போல
“இல்ல கீர்த்தி”
“அப்பெறம்… எப்படி இப்படி ஒக்காருறீங்க’’
அன்புவால் அவளை எதிர்கொள்ளவே முடியவில்லை
“கீர்த்தி”
“ம்”
தப்பா நெனச்சிட்டீங்களா?
“இல்ல”
“அப்பெறம்”
நீங்க என் கூட ஒக்காந்தது தப்பு
“ஸாரி கீர்த்தி ஒன்கூட அப்படி ஒக்காரணும்னு தோனுச்சு. அவ்வளவு தான்
“அன்பு”
“ம்” ” நீங்க என்னைய லவ் பண்றீங்கன்னு நெனைக்கிறேன். அப்பிடித் தான அன்பு.’’
போட்டு ஒடைத்தே விட்டாள் கீர்த்தி
“ஐ கேன் அன்டர்ச்டாண்ட்ண்ட் யுவர் ஆட்டிடியூட் அன்பு,
“கீர்த்தி….’’
“ம்”
நீங்க என்ன நெனைக்கிறீங்க?
“எப்படி?’’
“எப்பின்னா என்ன சொல்றதுன்னு தெரியல’’
சும்மா சொல்லுங்க பளிச் செனச் சொன்னாள் கீர்த்தி
நீங்க தப்பா நெனைக்க மாட்டீங்களே ,
“சொல்லுங்க”
“நான் ஒங்கள ….. ஒங்கள ….’’
திணறினான்
“என்ன அன்பு தெணறுறீங்க”
கீர்த்தி ஐ லவ்யூ அடுத்த வார்த்தை பூவாய் வந்து விழுந்தது.
இதைக் கேட்ட கீர்த்தி அன்புவை ஆணியடித்தது போல பார்த்தாள் .
என்னங்க நான் சொன்னது தப்பா?
“இல்ல அன்பு நான் காதலிக்கிறேன்’’என்ற கீர்த்தியின் வார்த்தையைக் கேட்ட போது அன்புக்கு ஆயிரம் இறக்கைகள் முளைத்தது . சந்தோசத்தில் உச்சிக்கே போனான்.
என்ன அன்பு ரொம்ப சந்தோசப் படுறீங்க போல
ஆமா கீர்த்தி நீங்க சொன்ன வார்த்தையைக் கேட்டதும் எனக்கு என்னமோ மாதிரி இருக்கு
நீங்க சந்தோசப்படுற அளவுக்கு நான் என்ன சொன்னேன்னு நினைக்கிறீங்க? என்ற பதிலையும் உடனே சொன்னாள்.
லவ் பண்றேன்னு சொன்னீங்களே
“ம்” நான் சொன்னத தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களா?
ஏன்?
” நான் லவ் பண்றேன்னு சொன்னது ஒங்கள இல்ல
“அப்பெறம் ? படபடப்பாய்க் கேட்டான் அன்பு
‘‘ நான் இன்னொருத்தர லவ் பண்றேன் ’’.
இப்படியொரு இடியை அன்புவின் தலையில் இறக்கி வைத்தாள்.
கீர்த்தி அவன் வார்த்தையில் இளகியது.
ஆமா அன்பு நான் உண்மையத் தான் சொல்றேன் நான் ஏற்கனவே ஒருத்தர லவ் பண்றேன்
கீர்த்தி
“எஸ் அன்பு”
நான் ஒங்க கூட பிரண்டிலியா தான் பேசுனேன் ஸாரி
நோ ப்ராப்ளம் கீர்த்தி
இன்னொருத்தர காதலிங்கிறவங்கள நான் காதலிக்கிறேன்னு சொல்றது தப்பு. இன்னொருத்தன் கிட்ட மனசுக்குடுத்தவ கிட்ட எப்படி நான் பேசுவேன் பழகுவேன். ஏற்கனவே நீ
“ச்சே…… நீங்க இன்னொருத்தரு கூட மனசால வாழ்ந்திட்டு இருக்கீங்க. தப்பு . இப்படி நான் கேட்டது தப்பு தான்.
“இல்ல அன்பு நீங்க ப்ரோபோஸ் பண்ணுனது தப்பில்லையே’’
ஸாரி கீர்த்தி
நோ ப்ராளம் அன்பு”
அன்புவின் இதயம் முழுவதும் கீர்த்தி நிறைந்திருத்தாள்.
காதலிப்பவளைக் காதலிக்காமலா?
ம்… ஹுகும்.  தப்பு
அன்புவின் மனதிலிருந்த கீர்த்தி காதலியென்ற நிலையிலிருந்து நண்பர் நிலைக்கு நழுவினாள்.
கீர்த்தி நீ என்னோட காதலியா இருக்கிறத விட தோழியா  இரு. அன்பு ஆணித்தரமாய் அவன் மனதில் அடித்து வைத்தான்.
கீர்த்தி காதலிக்கிறாள் என்னையல்ல யாரையோ? காதலிப்பவளைக் காதலிக்கலாமா? தப்பு…..
அன்புவின் வானம் இப்போது அழகாய் இருந்தது.

ராஜா செல்லமுத்து