மதுரை பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாக குழு கூட்டம்

மதுரை,ஜன.12–
மதுரை மாவட்ட பாண்டியன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நிர்வாகக்குழு கூட்டம் அதன் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
பொது மேலாளர் குழந்தைவேல் வரவேற்றார். இணைப்பதிவாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, போஸ், பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்காக பாடுபட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த உரிமை பெற்றுத் தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மதுரை மாவட்ட மக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வது.
மதுரை மாநகரை சர்வதேச நகராமாக உருவாக்கும் வகையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் நவீன பஸ் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.