புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

தேவகோட்டை, ஜன.12–
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளி பொறுப்பு தலைமையாசிரியை பஞ்சு தலைமை வகித்தார். வரலாறு ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் 10–ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் மதி அஸ்வினுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
தேவகோட்டை வட்டார அளவில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் சிறப்பு பரிசு, சான்றிதழ் மற்றும் மெடல் பெற்ற 8-ம் வகுப்பு மாணவி அன்புக்கரசி, 9-ம் வகுப்பு மாணவி ப்ரீத்தா மற்றும் அவரது பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது போல 2017-18ம் கல்வி ஆண்டுகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற வைப்பது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த செய்தல். முடிவில் ஆசிரியர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.