கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன் பதிவு மையங்கள் திறப்பு

சென்னை, ஜன. 12–
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட இன்றே மக்கள் தங்களது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றார்கள்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாவதால் சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.
பொங்கல் கொண்டாட மக்கள் தற்போதே தயாராகி விட்டார்கள். பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
இதனால் இப்போதே மக்கள் தங்களது சொந்த வீட்டிற்கு சென்று கொண்டு உள்ளனர். தற்போது சென்னையில் கடும் மக்கள் நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முன்பதிவு மையம் கோயம்பேட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு சென்று மக்கள் எளிதாக பேருந்துகளை புக் செய்து கொள்ள முடியும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக இவ்வளவு நாட்களாக இந்த மையம் திறக்கப்படாமல் இருந்தது. இன்று திறக்கப்பட்டு இருப்பதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனேவே காலதாமதம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதாரண பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.