மலபார் கோல்டு ஒரே நாளில் 11 கிளைகள் திறப்பு

உலகின் மிகப் பெரிய ஐந்து நகைக்கடைகளில் ஒன்றான, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், 6 நாடுகளில் 11 புதிய ஷோரூம்களைத் திறப்பதன் மூலம், அதன் உலகளாவிய தடத்தை வேகமாக விரிவாக்குகிறது.

11 ஷோரூம்கள், நாளை (12ந் தேதி) ஒரே நாளில் திறக்கப்படும். புதிய ஷோரூம்களைத் திறப்பது, நகைக்கடையின் மொத்த ரீடெய்ல் நெட்வொர்க்கை 208 ஆக உயர்த்தும்.

ஒரு இந்திய நகை வியாபார ரீடெய்ல் செயின், ஒரே நாளில் ஆறு நாடுகளில் பெரிய எண்ணிக்கையிலான ஷோரூம்களைத் திறப்பது, இதுவே முதல் முறையாகும்.

6 கிளைகள் திறப்பு

இது குறித்து, மலபார் குழும தலைவர் எம்.பி.அஹமத் தெரிவிக்கையில், அல் கெய்ல் மால், அல் ஹசானாலு லுமால், அல்பு ஹெய்ராலு லுமால், சஹாரா சென்டர், அஜ்மான் சிட்டி சென்டர், கத்தாரிலுள்ள மால் ஆப் கத்தார், லாகூனா மால், ஓமனிலுள்ள மஸ்கட் சிட்டி சென்டர் ஆகிய யூஎஇ-விலுள்ள மால்களிலும் சிங்கப்பூரில் ஏஎம்கே, மலேசியாவில் ஆம்பங் மால், இந்தியாவில் தெலுங்கானாவிலுள்ள வாராங்கல் ஆகிய இடங்களிலும் இந்தக் குழுமம் ஷோரூம்களைத் திறக்கிறது.

தற்போது, மலபார் கோல்டு 197 ஷோரூம்களைக் கொண்டுள்ளது, அதில் 90 ஷோரூம்கள் இந்தியாவிலும், 107 வெளி நாட்டிலும் உள்ளன. உலகம் முழுவதும் ஷோரூம்களின் விரைவான விரிவாக்கம் என்பது, அதன் உலகளாவிய தடம்பதித்தலில் வேகமான விரிவாக்க குழும வியூகத்தின் ஒரு பகுதியாகும். 2017 ஆம் ஆண்டு மட்டும், மலபார் குழு நாடுகள் முழுவதும் 27 ஷோரூம்களைத் திறந்துள்ளது.

‘உலகளாவிய சந்தையில் நாங்கள் பரவலான அங்கீகாரத்தைப் பெறுகிறோம். இதுவே நாங்கள் உலகளவில் விரிவாக்கம் செய்வதற்கான முக்கியமான காரணம் ஆகும் என்று தெரிவித்தார்.

ரசனைக்கேற்ற வடிவமைப்புகள்

‘எங்கள் முக்கியமான தொழில் மதிப்புகளான, வெளிப்படையான தன்மை, நேர்மை, தரம் ஆகியவற்றுடன் எங்கள் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், தயாரிப்பு வடிவமைப்புகள் போன்றவை, வயது வித்தியாசமின்றி ஒவ்வொரு தரமான வாடிக்கையாளர்களின் ரசனைக்குப் பொருந்துவதால், உலகளவில் ஏற்றுக் கொள்ளுதலுக்கு முக்கிய காரணிகளாகும்’ என்று அவர் கூறினார். மேலும், ‘2018-ஆம் ஆண்டில், நாங்கள் கூடுதல் ஷோரூம்களையும், உற்பத்தி பிரிவுகளையும் திறப்போம். இது உலகின் சிறந்த நகை விற்பனையாளராக வேண்டிய எங்கள் பார்வைக்கு எரிபொருளாக இருக்கும்’.

50 கிளைகள் திறக்க திட்டம்

அதன் உலகளாவிய விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களில் இந்த ஆண்டு, 50 ஷோரூம்களை, மலபார் கோல்டு திறக்கவுள்ளது.

‘நாங்கள் புதிய எல்லைகளை விரிவுப்படுத்தவுள்ளோம், அமெரிக்கா, இலங்கை, ப்ரூனே மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளில், எங்கள் இருப்பைக் குறிக்கிறோம்’ என மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் ஷாம்லால் அஹமது கூறினார்.

சார்ஜாவில் மாபெரும் விழா

உலகளவில் 200 ஷோரூம்கள் என்ற மைல்கல்லைக் கடந்ததைக் கொண்டாடும் பொருட்டு, ஷார்ஜாவிலுள்ள அல்ஹசானாவில் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார்காடு (கேரளா), அப்பாஸ்யா (குவைத்), ஹிமாயத் நகர் (ஐதராபாத்), கொண்டபூர் (ஐதராபாத்), மால் ஆப் திருவாங்கூர் (கேரளா), நொய்டா (உபி), தெற்கு விரிவாக்கம் (டெல்லி), வாஷி (மும்பை), லூதியானா (பஞ்சாப்), ராஜ்கோட் சூரத் (குஜராத்) மற்றும் கரீம் நகர் (தெலுங்கானா) ஆகிய பகுதிகளில் இந்தக் குழுமத்தின் புதிய ஷோரூம்கள் வரவுள்ளது.

கூடுதல் வேலை வாய்ப்பு

இந்த நிறுவனம், இந்தியாவில் தற்போது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பெங்களூரிலும் மற்றும் வெளிநாடுகளில், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் அஉ-இலும் உற்பத்தி பிரிவுகளைச் செயல்படுத்துகிறது.

‘இந்த நாட்டில், அதிக ஷோரூம்கள் மற்றும் உற்பத்தி பிரிவுகளை அமைக்க, இந்தக குழுமம் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியா அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிற ‘மேக் இன் இந்தியா’ போன்ற முயற்சிகளை மேம்படுத்துகிறது’ என, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனரான ஓஅஷெர் தெரிவித்தார்.

இந்தக் குழுமமானது, வீட்டு வசதி, சுகாதாரம், சுற்றுச் சூழல், பெண்கள் அதிகாரம் மற்றும் கல்வி போன்ற 5 முக்கிய பகுதிகளில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்காக, அதன் வருடாந்திர லாபத்தில் ஐந்து சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.