பசி

“சாலையோர அந்த உணவு விடுதி ரொம்பவே பர­ப­ரப்­பாக இருந்­தது.
யார் எது­வென்று கேட்­­கா­மல் எல்­­லா­ருக்கும் அள்ளியள்ளிக் கொடு­த்துக் கொண்­டி­ருந்­தார்கள் தம்பி இன்னும் ரெண்டு இட்லி
“வேணாங்க”
“அட சாப்­பி­டுங்க தம்பி”
“தம்பி ஒங்­க­ளுக்கு சட்னி வேணுமா?”
“ஒங்­க­ளுக்கு இருக்­கட்­டுமே”
இல்ல இந்­தாங்க என்று ஒரு பெரி­யவர் எல்­லோ­ருக்கும் டிபனை வாரி வழங்­கிக்­ கொண்­டி­ருந்தார்.
ஓகே சார் வணக்கம்
“ரொம்ப நன்­றிங்க”
“சிலர் சிறி­தாக புன்­ன­கையை மட்­டுமே விட்டுச் சென்­ற­னர்.
இதைப் பார்த்துக் கொண்­டி­ருந்த மத­னுக்கு ஏதும் புரி­ய­வில்லை .
என்ன இது எல்­லாரும் சாப்பிட்­டுட்டு தேங்­ஸ் சொல்­றாங்க.
கைகு­டுக்­கி­றாங்க ;சிரிக்­கி­­றாங்க; காசு யாரும் தர­மாட்­டேங்­கி­றாங்­களே .மதன் குழப்­பத்தின் உச்­சிக்கே
சென்றான் .கூட்டம் நெட்டி நெருக்­கி­யதால் மதனால் உள்ளே போக முடி­ய­வில்லை. ஒரு சிலர் மட்டும் கையில் கிடைத்த சிறு தொகையைக் கொடுத்து விட்டுச் சென்று கொண்­டி­ருந்­தார்கள்.
இது என்ன வித்­யா­சமா இருக்கே. அருகில் இருந்­த­வ­ரிடம் விசா­ரித்­தான்.
“சார் இங்க என்ன நடக்­குது?
“ம்” .. ஹோட்­டல்
அதுதான் சார்… எனக்குப் புரி­யல .எல்­லாரும் சாப்­பிட்­டுட்டு எதுவும் குடுக்­காம போறாங்க. ஒரு சிலர் அஞ்சு பத்து தான குடுக்­கி­றாங்க. அதுதான் எனக்குப் புரி­யல
தம்­பி நீங்க இந்த ஊருக்கு புது­சா?
ஆமாங்க அதான் நம்ம குரு­சா­மி­­யோட கடைய பத்தி தெரி­யல
“என்­னன்னு சொல்­லுங்க சார்’’
மத­னுக்குள் ஆர்வம் கூடி­யது
தம்பி குரு­சாமி இங்க ரொம்ப வரு­ச­மா கட வச்­சு­ருக்­காரு. இதுல லாப நோக்­கத்­துக்கு இல்ல சேவை நோக்­க­த்­துக்கு தான் எப்­படி? என விழித்தான் மதன்
தம்பி ஹோட்டல்ங்கி­றது. முன்­னால எப்­படி ஆரம்­பிச்­சுன்னு தெரி­யுமா? சாப்­பிட முடி­யா­த­வங்­க­ளுக்கு ஒரு உதவி செய்­யத்தான் ஆரம்­பிச்­சாங்க. அப்ப காசு பண­மெல்லாம் பெருசா இல்ல .சேவை மனம் – மக்­க­ளோட பசி தான் முக்­கி­யமா இருந்­துச்சு .ஆனா இப்ப இதுவே பெரிய தொழிலா போயி­ருச்சு .இப்ப பாருங்க நம்ம குரு­சாமி அண்­ணோட கட­யில எவ்­வ­ளவு பேரு சாப்­பி­டு­றாங்­கன்னு தெரி­யுமா?
“ம்”
இந்த ஊரே சாப்­பி­டு­­துங்­க. இங்க சாப்­பி­டுற யாருக்கும் பில் போடு­ற­தில்ல .எல்­லாரும் வயி­றார சாப்­பிட்­டுட்டு போக­லாம்.
அப்­பிடி­யெ­­ாரு சேவைய செஞ்சிட்டு இருக்­காரு குரு­சாமி’’ மதன் ஆச்­சர்­யத்தில் மூழ்­கி­னான்.
“இப்­பி­டி­யொரு மனு­சருங்­க­ளா?
ஆமா தம்பி …இந்த மாதிரி ஒரு சில ஆட்கள் இருக்­கி­ற­து­னால தான் மழை பெய்யுது; இந்த பூமி கொஞ்­ச­மா­வது ஈர­மா­யி­ருக்கு..
ஐயா கொஞ்சம் சாம்பார் என்று கேட்ட ஒரு­­வருக்கு இரண்டு இட்­லியும் சாம்­பாரும் சேர்த்தே கொடுத்தார் ஒரு ஊழி­­யர்.
ஒரு பக்கம் மாவு ஆடிக் கொண்­டி­ருந்­தது. ஒரு பக்கம் சப்ளை நடந்து கொண்­டி­ருந்­தது. ஒரு பக்கம் ஆட்­கள் சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்­தனர் . அந்த இடமே திரு­வி­ழாக் கோல­மாக காட்­சி­ய­ளித்­துக் கொண்­டி­ரு­ந்­த­து.
மதனுக்குள் ஒரு பூரிப்பே பிறந்­தது.
“அடடா இந்­த ஊர்ல இப்­பி­டி­யொரு ஆளா?
அவ­ன­வ­ன் ஓட்டல் வச்சு பணம் சம்­பா­ரி­ச்சு கோடி கோடியா கொள்­ளை­ய­டிக்­கிற இந்த ஒலக்­கத்­தில சேவை போது முன்னு நெனைக்­கி­றாரே இவ­ரு. மதன் ஆச்சரியத்தில்­ தி­ளைத்­தான்.
அப்­போது குரு­சா­மிக்கு ஒரு குழந்தை பச் என அவர் கன்­னத்தில் முத்தம் கொடுத்­தது .அந்தக் குழந்­தையின் தாயின் கையில் பால் இருந்­தது.
கொழந்­தைக்கு பாலும் குடுக்­கி­றா­ரா?
ஆமாங்க. அது­மட்­டு­மில்ல…. படிக்­கிற பசங்­க­ளுக்கு பேனா பேப்பர் பென்­சி­லும் ஓசியா குடு­ப்­பாரு என்ற போது இரு இண்டு சிறு­வர்கள் நோட்டு வாங்கிப் போனார்­கள்.
குரு­சாமி ரொம்­பவே சந்­தோ­ச­மாக இருந்­தார்.
“ஐய, நான் குருசாமி ஐயாவ பாக்க முடியுமா?’’ என்று அருகில் இருந்தவரிடம் கேட்டார்.
“ஓ” தாராளமா பாருங்க என்ற போது மதன் அவர் அருகே போனான்.
“தம்பி சாப்பிடுங்க’’ என்றார்.
‘‘இல்லய்யா இப்பத்தான் நான் சாப்பிட்டேன் ’’என்றான் மதன்.
ஐயா ஒங்களால எப்பிடி இதுமாதிரி நடத்த முடியாது.
தம்பி பணம்ங்கிறது வெறும் காகிதம் .மனுசன் தான நெசம். நான் காகிதத்த சேக்கல ; மனுசங்கள சேக்குறேன் என்றார் வெள்ளந்தியாய் .
வேறு ஊரில் சாப்பிட்ட ஞாபகம் மதனுக்குள் வந்தது….
என்னது “டாக்ஸா? என்று அதிர்ந்தான்.
ஆமா… நீங்க சாப்பிட்ட தோசைக்கு டாக்ஸ் போட்டுருக்காங்க என்றார்கள்.
அந்த ஞாபகம் மதனுக்குள் வர அங்கிருந்து வெளியேறினான்.
குருசாமி ஐயா நீங்க நல்லாயிருக்கனும் என்ற ஒரு பெரியவரின் வாழ்த்தொலி மதனின் காதை நிறைத்தது.
ராஜா செல்­ல­முத்­து