சவுத் இந்தியன் வங்கி, முதியோருக்கு 2 புதிய சேமிப்பு கணக்கு: தனஞ்செயன் தம்பதி திறப்பு

சென்னை, ஜன.11 –
சவுத் இந்தியன் வங்கி முதியோருக்கு இரண்டு புதிய சேமிப்பு கணக்கு திட்டத்தை தொடங்கியுள்ளது. சவுத் இந்தியன் எலைட் சீனியர், மகிளா எலைட் ஆகியவை ஆகும். இதில் குறைந்த வைப்புத்தொகை நகரங்களில் ரூபாய் ஐந்து ஆயிரமும், நகரமல்லாத மற்ற இடங்களில் ரூ.2500 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் பயன் அளிக்கும் வகையில் ஆண்டு சந்தா ரூபாய் 199 க்கு, விபத்துக்காப்பீடு அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு அவர்கள் வீட்டிற்கே இரண்டு முறை சென்று சேவை அளிக்கப்படும். கணக்கு துவங்கிய முதல் வருடம் பாதுகாப்பு பெட்டக வசதி வாடகையில் 2.5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இதனை சென்னை மண்டல அலுவலகத்தில் பரதநாட்டிய சாதனையாளர்கள் தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன், மண்டல மேலாளர் எஸ்.எஸ். பீஜி முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.
சவுத் இந்தியன் வங்கி, கேரளாவின் திரிசூர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய தனியார் வங்கியாகும் . இது 851 கிளைகளும், 4 சேவை கிளைகளும், 48 விரிவாக்கங்களும், 20 அலுவலகங்களும் கொண்டது. மேலும் இந்த வங்கி, இந்தியா முழுவதும் 1328 ஏடிஎம்கள் மற்றும் 42 பண வைப்பு இயந்திரங்களைக் கொண்டுள்ளது.