கையுந்து போட்டியில் திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவன் தங்கம்

தேசிய அளவிலான கடற்கரை கையுந்து போட்டியில், திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவன் தேசியளவில் தங்கம் பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான கடற்கரை கையுந்து போட்டி, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. இதில், ஒரிசா, தெலுங்கானா, மத்தியபிரதேசம், கோவா, ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு (சிபிஎஸ்இ) இண்டர்நேஷனல் பள்ளி ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

இதில், திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி 10ம் வகுப்பு மாணவன் பா.தினகரன் கலந்து கொண்டு, தேசிய அளவிலான கடற்கரை கையுந்து போட்டியில், தங்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார்.

இந்த போட்டியில், டெல்லி அணியும், தமிழ்நாடு அணியும் மோதின. இதில், 21-–13 மற்றும் 21–-16 என்ற புள்ளி கணக்கில், தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற மாணவனையும், பயிற்சியாளர் சி.பாஸ்கரையும், பள்ளியின் தாளாளர் கே.சிவசாமி, செயலர் எஸ்.சிவசாமி, இயக்குநர் சக்திநந்தன்- வைஷ்ணவி மற்றும் பள்ளி முதல்வர் சுமதி செங்குட்டுவன் ஆகியோர் பாராட்டினார்கள்.