உடுமலை ஏ1 சிப்ஸ் கிளையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

உடுமலை ஏ ஒன் சிப்ஸ் விற்பனை மையத்தில், ஓராண்டு நிறைவு விழாவையொட்டி, நாளை முதல் மூன்று நாட்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு, சூடான அல்வாவை வழங்க உள்ளது.

கோவையை மையமாக கொண்டு இயங்கி வரும், ஏ ஒன் சிப்ஸ் நிறுவனம், சிப்ஸ் வகை தயாரிப்புகளில், தனக்கென ஒரு முத்திரையை பதித்து, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிறுவனம், நேந்திரம், உருளைக்கிழங்கு, பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட சிப்ஸ் வகைகள் மற்றும் முறுக்கு, இனிப்பு, காரவகைகளை விற்பனை செய்து வருகிறது.

50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஏ ஒன் சிப்ஸ் நிறுவனம், 2020 ஆண்டு இறுதிக்குள் 1000 கடைகள் நிறுவ திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது.ஏ ஒன் சிப்ஸ் நிறுவனர்கள் ராஜன், தாமோதரன், முரளி ஆகியோரின் முயற்சியின் பேரில், அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏ ஒன் சிப்ஸ் நிறுவனத்தின் உடுமலை கிளையில், ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.

உடுமலை கிளையில் விழா

திருப்பூர் மாவட்டம், உடுமலை பொள்ளாச்சி ரோட்டில், மாரியம்மன் கோயில் எதிரே இயங்கி வரும், ஏ1 சிப்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிறுவனத்தில், சிப்ஸ் வகைகள் மற்றும் இனிப்பு வகைகள், மிட்டாய் வகைகள், ஹோம் மேட் சாக்லெட் வகைகள் என, 250க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேந்திரம் சிப்ஸ் 1கிலோ 390 க்கும், மரவல்லிக்கிழங்கு சிப்ஸ் 300க்கும், உருளைக்கிழங்கு சிப்ஸ் 400க்கும் மற்றும் இனிப்பு வகைகள் 300 முதல் 450 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சூடான அல்வாவை ருசிக்கலாம்

இங்கு, தரமான எண்ணெய் மற்றும் உட்பொருள்களைக் கொண்டு செய்யப்படுவதால், உடுமலை நகர மக்கள் மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும், ஏ1 சிப்ஸ் நிறுவனம் கவர்ந்துள்ளது.

இந்தநிலையில், ஏ1 சிப்ஸ் நிறுவனம், உடுமலையில் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு, சூடான கோதுமை அல்வா பரிசாக வழங்கப்படுகிறது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு, சூடான அல்வாவை சுவைக்க, வாடிக்கையாளர்களுக்கு ஏ1 சிப்ஸ் நிறுவனம் அழைப்புவிடுத்து உள்ளது.