சொல்­லாத காதல்

“என்னைக் கண்­டதும் கவிழும் உன் இமைகள் கொசு­­வ­லையா? இல்லை மீன்­வ­லையா?”
இந்தக் கவி­தையின் அர்த்­தத்தில் தான் சத்யா இருக்­கிறாள்.
வாழ்க்கை என்­பது இணைந்­தி­ருப்­பது. பிரிந்­தி­ருப்­பது. பிரிவு தான் தனித்­தி­ருப்­பது. இணை­யல்ல என்பது எப்­போது உனக்குப் புரியும்?
பார்­வைகள் பரி­மா­றிக் கொண்டபின் பாசத்தை பயிர் செய்­வது தானே நியாயம் .பார்த்துக் கொண்டே இருப்­பது பரி­தாபம். என் இதயம் உன்னைத் தான் நேசிக்­கி­ற­தென்று சொன்னால் நீ என்ன சொல்வாய்.
‘‘நான் அப்­ப­டி­யெல்லாம் இல்ல. நீங்க என்­னைய தப்பா புரி­ஞ்சுக் கிட்­டீங்க .ஸாரி… அல்­ரெடி ஐ ஆம் என்கேஜ்டுன்னு சொல்­லுவ’’ இல்ல …
ஸாரிங்க நான் ஏற்­க­னவே ஒருத்­தர லவ் பண்­ணிட்டு இருக்­­­­கேன்னு சொல்­லுவா.
இது தான பெண்­க­ளோட பெரிய மந்­திரம். இதுல சத்­தியா நீ ஒண்ணும் பெரிய விதி விலக்­கில்ல . எல்லோ­ரோட பொய் மாதிரி தான் ஒன்­னோட உண்­மையும் இருக்­கப்­போ­கு­து. நீ தான் தெனமும் என்னப் பாக்­குற . நானும் தான்­ ஒன்னப் பாக்­குறேன். வாய் தெறந்து கேட்டா. நீ என்ன சொல்­லு­வன்ற பயத்­தி­லயே நான் ஒன்­கிட்ட எதுவும்­சொல்­லாம இருக்கேன் .
ஏன்னா சொல்­லா­மக்­கூட இருந்­தி­ரலாம் ;சொல்­லிட்­டு ஒன்­னைய காத­லிக்­கி­றது தப்பு .அதுதான் எது­வுமே ஒன்­கிட்ட சொல்­லா­ம இருக்கேன் சத்­யா.
சத்யா நீ தான் என்­னோட உசு­ருன்னு எப்­படி ஒனக்கு புரிய வைப்பேன். முடி­யாது நான் சொல்லி நீ ஏதா­வது ஏடா கூடமா சொல்­லி­ரு­வியோ?
பயமா இருக்­குப்பா ….
நிஜமா நீ என்­னைய நேசிக்­கி­றி­­யான்னு தெரி­யாத வரைக்கும் ஒன்­கிட்ட நான் எதுவும் பேசப் போற­தில்ல. ஏன்னா சொல்­லாத காதலுக்கு வீரியம் அதிகம் சத்யா.
இப்­படிப் புலம்பித் தீர்த்­தாலும் என்­றா­வது ஒரு நாள் வாய் திறந்து சொல்ல வேண்­டு­மென்று தான் என் மனது கெஞ்­சு­கி­ற­து.
சத்யா….
உன்னை நான் பார்த்­தி­ருக்கக் கூடா­தோ? உன்­னுடன் நான் பேசி­யி­ருக்க கூடா­தோ ? மனது கிடந்து மன்­றா­டு­கி­றது.
சத்யா என் செல்­லமே …..
உன் வருத்­தங்­களைக் கேட்­டது. என்­ தவறா? உன் பிரச்­சி­னை­களைச் சுமந்­தது என் குற்­றமா?
தனிப்­ ப­டகாய் தவித்த உனக்கு ஓர் ஆறுதல் தோணி­யாய் இருக்க நினைத்­தது பிழையா? சத்­யா உன்­னு­டைய துய­ரங்­களைத் தாங்­கி­ய என் நெஞ்சில் உன்னை நான் நேசிக்­கிறேன். நீ என்ன சொல்வாய் என்­ப­தைத்தான் நான் யோசிக்­கிறேன் . எனக்குள் உன்னைப் பற்­றிய ஆசைகள் துண்டு மேகங்­க­ளாய் ஒன்று சேர்ந்­து எனைத்­ துண்­டாடுகிறது. நீ என்­னைப்­பற்றி என்ன நினைக்­கிறாய் …..?
நான் சொன்னால் என்னை ஏற்றுக் ­கொ­ள்­வாயா?
உத­றலில் துடிக்­கி­றது உத­டுகள் . பயத்தில் பிதுங்குகிறது. கண்கள் எவ்­­வ­ளவு வரு­டங்கள் உன்னை நான் பார்த்துக் கொண்டே இரு­ப்­பது இன்று ஒரு நல்ல முடிவு எடுக்­க­லா­மென்று நினைக்­கிறேன். இன்று இத­யத்தை உன்­னிடம் ஒப்­ப­டைக்­க­லா­மென யோசிக்­கிறேன். முடி­வெ­டுத்து விட்­டென் சத்­யா. இன்று அலு­வ­லக உணவு இடை­வேளையில் உன் உத்­ர­வாதம் கேட்கப் போகிறேன்.
சத்­யா….
ம்…
வந்து….. வந்து ….வந்­து வார்த்­தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்­கி மர­ம­ண­ம­டைந்து விட்­டன.
வந்து…. வந்து ….. வந்து….. என மீண்டும் இழுத்தேன்.
ஹலோ சார் என்­னன்னு சொல்­லுங்க. வந்து வந்­துன்னு இழுத்­திட்டு இருந்தா எப்­படி?
சத்யா….
ஆமா என்­னோட பேர்தான் என்ன வேனும்னு சொல்­லுங்க
இல்ல…
பெறகு ?
திண­றினேன் ;மேடை­களில் முழுங்­கும் என் குரல் ஒரு பெண்­ணிடம் பேசும் போது ஏன் வெளிவ­ர மறுக்­கி­றது.
சத்யா….
சொல்­லுங்க
இப்ப சொல்­றேன்..
ம்…
சத்யா நான் ஒன்னக் காத­லிக்­கிறேன்
கட­க­ட­­வெனச் சிரித்தாள் ….
ஏங்க…. காதலிங்­கி­றது காமெ­டி­யா­? இப்­படிச் சிரக்கி­றீங்க?
இல்ல இவ்­வ­ளவு நாள் எனைய பாத்­திட்டு தான இருந்­தீங்க
ஆமா….
வாயத்­தொறந்து சொல்ல வேண்­டி­யது தான சார்
இப்போ என்­னாச்சு?
போன வாரம் தான் நம்ம கூட வேல­பாக்­குற சுரேஷ் என்­கிட்ட ப்ரோபோஸ் பண்ணு­னா­ரு.
நீ என்ன சொன்ன?
உத­ற­லோ­டு கேட்­டேன்
கொஞ்சம் யோசி­ச்சு பாத்­திட்டு ஓகே சொல்­லிட்­டேன் .
குண்டைத் தூக்கிப்­போட்டாள்; அடிப்­பாவி பத்து வரு­சமா பாம்பாக் கெடந்த நான் சரியில்ல ;நேத்து வந்த நாதம் ஒனக்கு பெரு­சா தெரி­யு­துல்ல.
ஆமா ….நீ எப்ப சொல்­லு­வே­ன்னு எதிர்­பார்த்­துட்டு இருந்­தேன்.நீ தான் சொல்­லல
நான் முன்­னாடி சொல்லியிரு­ந்தா நீ ஓகே சொல்­லி­யி­ருப்­பி­யா?
ஆமா … என்றாள்
ஐயய்­யோ சொல்­லாத காத­லெல்லாம் இப்­ப­டித்தான் பாழ­ாப் போகுமா? மனது கிடந்து அடித்த­து
என்னைக் கண்­டதும் கவிழும் உன் இமைகள் கொசு­வ­­லையா? மீன் வலை­யா?
கவி­தையின் அர்த்தம்
இப்­போது எனக்குத் தெரிந்­தது …சத்யா கொசு­வ­லை­ததான்.
ராஜா செல்­ல­முத்­து