பெண்ணின் கண்ணீர்

பாரதி இந்த ஆட்டோவுல போகட்டுமா?
வேண்டாம் சார் கூட்டமா இருக்கு
பஸ் ஸ்டிரைக் எல்லா ஆட்டோவும் கூட்டமா தான் வரும் போல கொறைவான ஆட்டோவுல போங்க பாரதி தடுத்து நிறுத்தினார்.
தேனாம்பேட்டை மார்க்கெட் சாலை அரசுப் போக்குவரத்து வாகனங்கள் இல்லாததால் கொஞ்சம் வெறிட்சோடிக் கிடந்தது . மார்க்கெட் நேரமாததால் நெருக்கடியில் நெளிந்தது சாலை .
‘‘பாரதி..’’
சொல்லுங்க சார்
‘‘அடுத்த ப்ராஜெக்ட் எப்போ? ’’கேள்வியாய்க் கேட்டேன்
பண்ணணும் சார்… வாகனச் சத்தங்களின் ஊடே கொஞ்சம் சத்தமாகப் பேசினார்.
காலம் ரொம்ப கொடூரமானது பாரதி . நம்மோட இளமையெல்லாம் குத்திக்கிழிச்சிட்டுப் போயிரும் .சீக்கிரமே செயிச்சு முன்னுக்கு வந்திரணும் . இல்ல நாய் கூட நம்மள திரும்பிப்பாக்காது.
ஆமா சார்
நீங்க இங்க படிக்கிற வரதான் ஸ்டூடண்டுட் .படிச்சு முடிச்ச பெறகு இங்க நீங்க வரலாம் போகலாம் ;முன்ன மாதிரி எல்லலாம் இருக்க முடியாது.
ஆமா சார்.
ஸ்டூடண்ட்டா இருக்கும் போதே எதையாவது சாதிச்சுருங்க. சின்ன வயசுல ஏதாவது செய்தால் தான் நம்மள ஒசரத்துக் கொண்டு போகும்.
ஆமா சார் இப்பவே நான் திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
திங்கிங் இஸ் என்ட்லஸ் ….இட்ஸ் ஆன் ஒசைன் . ஸ்டாப் இட் . டூ இட் பாரதி என்று அவரின் தோள் தட்டி நின்ற போது விர்ரென விரைந்து வந்த ஒரு ஷேர் ஆட்டோ எங்கள் முன்னால் நின்றது.
ஓ.கே பாரதி. இதுல கூட்டமா் கொஞ்சங் கொறையா இருக்கு.
ஆமா சார்
நான் வரவா பாரதி
ஓ.கே சார் வழியனுப்பி வைத்தார்.
சந்தடிகளில் சிக்கிய ஷேர் ஆட்டோ கொஞ்சங் கொஞ்சமாய் நழுவி வெளியே வந்தது.
தேனாம் பேட்டை சிக்னலைத் தொடுவதற்குள் திணறியது.
இரு இருக்கையில் எதிர் இருக்கை எனக்குக் கிடைத்தது. என் தோளோடு இரண்டு ஆண் தோள்கள் உரசிக் கொண்டிருந்தன. பெண்ணோடு அமருதல் நெருப்பருகே அமருவது போல பெருந்தவம். ஆணோடு அமர்வது நெருப்பில் அமருவது போல கொடும் பாவம். இந்தப்பயணம் இந்த ஆண்களோடு தானா?
சலித்துக் கொண்டது மனது
லேசாக உரசினாலும் கடுமையான கோபம் வந்தது. ஏனெனிந்த இறைவன் இப்படியொரு ஒரு ஈர்ப்பை நமக்குக் கொடுத்தான். இம்சைகள் நிறைந்த பயணத்தில் எதிர் இருக்கையைப் பார்ததேன். இரண்டு இளம்பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
இது போதும் இந்தப் பயணம் .கொஞ்சம் இனிக்குமென்று சந்தோசப்பட்டேன் . கண்ணுக்கு நேரே இருந்ததால் அவர்களை அடிக்கடி பார்க்க வேண்டி வந்தது.
இரண்டு இளம் பெண்களும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவளை ஒருத்தி தோற்றிக் கொண்டிந்தாள். சாதாரணமாகக் கவனித்தேன். இப்போது உற்று நோக்கினேன் . இந்தப் பெண்ணுக்கு ஏதோ பிரச்சினை
போல .கொஞ்சம் கவனித்தேன். ஒருத்தியின் கண்கள் ஈரமாயின .ஆண்களின் அழுகையை விட பெண்களின் கண்ணீருக்கு கனம் அதிகம் .
அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தால் எனக்கு வலித்தது.
ஏன் அழுறீங்க, ஒங்களுக்கு என்ன பிரச்சினை.? அழுகையும் சிரிப்பும் எல்லோருக்கும் ஒன்று தான் கேக்கலாமா? மனசு சொன்னாலும் யாரென்று தெரியாதவளிடம் எப்படிக் கேட்டது; திணறினேன் .அவள் அழுது கொண்டே இருந்தாள்.
என் பயணம் இப்போது கசப்பானது .எதுக்கு இந்த பொண்ணு இப்படி அழுகுது? சோகச் சங்கிலிகள் என்னைச்சுற்றின. வரும் பாதைகளைக் கவனிக்காமல் அவளின் அழுகையையே கவனித்துக் கொண்டிருந்தேன். உடன் வந்த தோழி கைக்குட்டையில் அவளின் கண்ணீர் துடைத்தாள். இருந்தும் அவளின் கன்னங்கள் ஈரமாகிக் கொண்டே இருந்தன.
ச்சே…. ஏன் இந்தப் பொண்ணு அழுகுது . ரெண்டு விசயங்களுக்கு தான் அழுகை வரும் ;ஒன்று இறப்பு இன்னொன்று இழப்பு. இந்தப் பெண்ணின் அழுகையின் அழுகை இழுப்பாயிருக்கும் காதலன் ஏதும் திட்டி விட்டானா? ஒரு வேளை இவளைக் காதலித்து ஏமாற்றியிருப்பானோ?
அடே மூடா பெண்கள் பலவீனமானவர்கள் அவர்களைத் துன்புறுத்துவது பெரும்பாவம் .துயரப்பட வைப்பது
தவறு .எந்த அரக்கனோ இந்த அழுகியை அழவைத்திருக்கிறான்.
அழ வைத்தவனுக்குத் தெரியுமா? இவள் அழுகையின் ஈரம் .
அவள் அழும் அழகில் எனக்கு கதை வந்தது; கவிதை வந்தது; அதையும் மீறி கடுமையான கோபம் வந்தது.
இப்போது பயணம் எனக்குக் மிகக் கனமானது. ஒரு நிறுத்தத்தில் ஒரு பெண் தன்னுடைய இரண்டு பெண் குழந்தையுடன் தாயுடனும் ஏறினாள் . என் இருக்கையில் இடமில்லாததால் எதிர் இருக்கையில் அமர்ந்தார்கள்.
குறும்புக் குழந்தைகள் இருக்கையில் இருப்பது யாரென்று தெரியாமலே அவர்களின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டன . ஒரு குழந்தை அழுபவளின் மடியில் ஏறி உட்கார்ந்தது.
கண்ணீர் சிந்றிக் கொண்டிருந்தவள் கவனமாக அந்தக் குழந்தையைப் பிடித்தாள். அழுகை மட்டும் அடங்கிய பாடில்லை மடியிலிருந்த குழந்தை ஏதேதோ சேட்டைகளை செய்தது.
கவனமாக பிடித்த படியே அந்த குமரி அழுது கொண்டே இருந்தாள்.
என் கவனம் முழுவதும் அவளைக் கவனிப்பதிலேயே இருந்தது.
நிறுத்தங்கள் வர வர நிறைப் பயணிகள் ஏறினார்கள். இறங்கினார்கள் ; அவள் என்னோடு சில நிறுத்தங்கள் பணப்பட்டாள்; அந்தப் பயணம் ஒரு பெண்ணீர்ப்பை என்னுள் விதைத்தது. அந்தக் குழந்தைக் காரியின் குடும்பமும் ஒரு நிறுத்தத்தில் இறங்கினார்கள்.
தேங்ஸ்ப்பா என்றாள்.
அந்தப் பெண்.
அழுகையும் சிரிப்பும் கலந்த ஓர் ஆனந்தத்தில் அதை அமோதித்தாள் அழுது கொண்டிருந்தவள். வரும் ஒரு நிறுத்தத்தில் அவளும் இறங்கிவிட எனக்குப் பாராமானது.
ஏன் இந்தப் பெண் அழுது கொண்டிருந்தாள். காரணம் எதுவாக இருக்கும் இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை . அவள் அழுகைக்கான காரணம் தெரியவே இல்லை.
ஆனால் ….அதனாலேயே இந்தக் கதை பிறந்து வந்தது.
ராஜா செல்லமுத்து