நடப்பு ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்க இலக்கு

சென்னை, ஜன. 9 –
– நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளர் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், நடப்பு ஆண்டை நம்பிக்கை ஆண்டாக அறிவித்துள்ளது. மகளிருக்கு இலவச கியாஸ் இணைப்பு, பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி டெல்லிக்கு மாசு ஏற்படுத்த முடியாத (பிஎஸ்விஐ) BS-VI தர எரிபொருளை வழங்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடமும், பங்குதாரர்களிடமிருந்தும் நம்பிக்கையை மேம்படுத்துவதன் மூலம், நடப்பு ஆண்டு எங்களின் ‘நம்பிக்கை ஆண்டாக உள்ளது’ என்று இதன் சேர்மன் சஞ்சீவ் சிங் தெரிவித்தார்.
ஒவ்வொரு வினாடியும், இந்தியன் ஆயில் ஊழியர்கள், மற்றும் குழு உறுப்பினர்கள் சேர்த்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றி வருகின்றனர். எங்கள் நிறுவனம் நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் வாய்ந்த பாரம்பரிய நிறுவனமாகும்.
சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், வாடிக்கையாளர் வசதிக்காக கம்ப்யூட்டர் திறமையான பயன்பாடு ஆகியவற்றை எங்கள் நிறுவனம் அதிகரித்துள்ளது இது வாடிக்கையாளர் உறவு மேலாண்மையை அதிகரித்து அவர்களுடன் மிகவும் நெருக்கத்தை உருவாக்குகிறது.
நடப்பு ஆண்டின் இந்த இலக்கை நிறைவேற்றுவதன் மூலம், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இணைந்துள்ள COP-23 உச்சி மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட குறைந்த கார்பன் வெளியீடு நிலையான எதிர்காலத்திற்கான சவாலை சந்திக்க உதவும். இந்தியாவில், எதிர்கால எரிபொருளாக, இயற்கை எரிவாயு உருவாக்கம் மற்றும் புதிய மரபு சாரா எரிசக்தி வசதிகளை அதிகரித்து இந்திய வருவாயை மீண்டும் வரும் ஆண்டுகளில் முன்னேற்றுவதற்கு இந்த தேசிய நிகழ்ச்சி வழிவகுக்கும் என்று சஞ்சீவ் சிங் கூறினார்.