டி.வி.எஸ். விக்டர் பிரீமியம் பைக்

சென்னை, ஜன. 9–
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டுவரும் டிவிஎஸ் விக்டர் பைக் கூடுதல் வசதிகளுடன் விக்டர் பிரீமியம் பைக் அறிமுகம் செய்துள்ளது என்று இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு தெரிவித்தார்.
இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 72 கி.மீ. தூரம் செல்லும். 4 ஸ்பீடு கியர் வசதி, 3 வால்வ் என்ஜின், கவர்ச்சி தோற்றம், பட்டன் ஸ்டார்ட் வசதி போன்ற கூடுதல் வசதிகளுடன் ரூ.56 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
டி.வி.எஸ். விக்டர் பிரீமியம் ‘மேட்’ ரக பைக்குகளாக 2 புதிய வண்ணத்துடன் மேட் ரகமாக நீலம் (வெள்ளை கலந்தது) மற்றும் சில்வர் (சிவப்பு கலந்தது) ஆகிய வண்ணத்தில் கிடைக்கிறது என்றார்.
சவுகரியம், பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை ஆகிய அம்சங்களோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் விக்டர், டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டாண்டர்டு சோதனை நிலைகளின்கீழ் 1 லிட்டரு-க்கு 72 கி.மீ. என்ற மிக நேர்த்தியான மைலேஜ்- வழங்குகிறது. நவீன ஸ்டைலிங், உயர்திறன்மிக்க என்ஜின் செயல்பாடு மற்றும் இவ்வகையினத்தில் முதன்மையான சவுகரிய அம்சங்கள் ஆகியவற்றின் உகந்த, ஒருமித்த கலவையாக டி.வி.எஸ். விக்டர் பிரீமியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகிய வற்றின் உகந்த கலவையை வழங்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட 3 வால்வு ஈக்கோத்ரெஸ்ட் என்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது.
நீண்டநேரத்திற்கு இதில் சவாரி செய்தாலும் அதிக சவுகரியத்தை உறுதி செய்யும் வகையில் நேராக நிமிர்ந்த நிலையில் வாகனத்தை ஓட்டும் முறையில் விக்டரின் இருக்கையும் மற்றும் வடிவமைப்பும் அமைந்துள்ளது. டி.வி.எஸ். விக்டரில் இடம்பெற்றுள்ள ஆயில் தோய்ந்த டெலஸ்கோப்பிக் முன்புற சஸ்பென்சனும் மற்றும் பின்புறத்தில் அமைந்துள்ள 5 படிநிலை மாற்றியமைக்கக்கூடிய ஹைட்ராலிக் சீரிஸ் ஸ்பிரிங் சஸ்பென்சனும், பைக்கை ஓட்டுபவருக்கும் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவருக்கும் மிருதுவான சவாரி மற்றும் கையாளும் திறனை உறுதி செய்கிறது. சவுகரியமான உயரத்தில் பாதத்தை வைத்துக்கொள்ளும் அமைப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர் பிடித்துக்கொள்வதற்காக குறிப்பிடத்தக்க அளவில் கம்பியும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
குறைவான எடையும் மற்றும் இதன் கச்சிதமான அளவீடுகளும் இதனை ஒரு திறன்மிக்க, எளிதாக கையாளத்தக்க மோட்டார் சைக்கிளாக நிலை நிறுத்துகிறது. நகர போக்குவரத்துக்கு மிகவும் உகந்த விக்டர் பிரீமியம் நெருக்கடி மிக்க போக்குவரத்திலும் எளிதாக பயணிக்கிறது. இதன் குறைவான கியர் விகிதாச்சாரமும், நேர்த்தியான பிரேக்கிங் அமைப்பும், அதிக நெருக்கடி மிக்க சாலைகளிலும் கூட உங்கள் பயணத்தை ஆனந்தமயமானதாக மாற்றுகிறது. ஒரு மணிக்கு 90 கி.மீ. என்ற அதிகபட்ச வேகமானது, வார இறுதி நாட்களில் நகருக்கு வெளியே நீண்டதூரம் பயணிக்க விரும்பும் நகர்ப்புறவாசிகளுக்கு பொருத்தமான மோட்டார் சைக்கிளாக விக்டர் பிரீமியம் விரும்பச் செய்கிறது.
டிஸ்க் மற்றும் டிரம் ஆகிய இரு விருப்பத்தேர்வுகளிலும் வருகின்ற விக்டர், ரெட், பிளாக் ரெட், பிளாக் சில்வர், கிரே, சில்வர் மற்றும் புளு ஆகிய ஆறு கண்கவர் வண்ணங்களில் கிடைக்கிறது. சிறப்பான செயல்திறன் மற்றும் சிறந்த சவுகரியத்துடன்கூடிய மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மற்றும் ப்ரீமியம் அம்சங்களை வழங்கும் வகையில் இவ்வகையினத்தில் ஸ்மார்ட்டான, திறன்மிக்க பைக்காக இது திகழும்.