காஞ்சீபுரம் மாவட்டத்தில் காதி கிராப்ட் மூலம் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை

காஞ்சீபுரம், ஜன. 9–
தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கதர் மற்றும் கிராமப் பொருட்கள் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய்துறை அதிகாரி அ.நூர்முகமது துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பண்டிகை கால சிறப்பு விற்பனை யில் மென்மையான கதர், மெத்தை, தலையணை, பட்டுப்புடவைகள், சோப்பு வகைகள், பூஜை பொருட்கள், தேன் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் வாங்கும் கதர் மற்றும் பட்டுச்சேலைகளுக்கு 10 மாத தவணை முறையில் கடன் படிவம் பெற்றுக்கொண்டு 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு காதி கிராப்ட் விற்பனை நிலையங் களில் இந்த 30 சதவீத தள்ளுபடி விற்பனை வருடம் முழுவதும் நடைபெ-றும். கிராமப்புற தொழிலாளர்கள் குடும்பம் மேன்மை அடைந்திட அனைவரும் இந்த கதர் பொருட்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.