விஞ்­ஞானம்

அவள் என் கண்­களை விட்­டுப்போய் வெகு­நாட்­க­ளாகி விட்­டன. என் இமை­க­ளுக்­கிடையில் அவளின் பிம்பம் சிக்கிச் சிக்கித் தவிக்­கி­றது. வெளிவ­ர முடி­யாமல் விழி­களில் அவள் நிற்­கிறாள். இந்த ஏக்கம் இன்னும் எவ்­வ­ளவு தூரம் என்­பது எனக்குத் தெரி­ய­வில்லை
அவ­ளு­டன் பேசிய நாட்­களை நினைத்து நினைத்து என் நெஞ்சம் நெருப்பாய் எரி­கி­ற­து.
அட மானங்­­கெட்ட மனசே அவ­தான் ஒன்­னைய தூக்கி எறிஞ்­சிட்­டு போயிட்­டாளே. பெறகு எதுக்கு அவள நெனைக்­கிற இந்த ஒலகம் பணம் பேர் புகழ் இதுல தான் அடங்கிக் கெடக்கு. ஒன்னு நீ முன்­னே­றுனா மட்டும் தான் இந்த ஒலகம் ஒன்­னைய தூக்கி வச்சுக் கொண்­டாடும் . பணத்­தோட பின்­னால போற மனு­சங்­க­ளுக்கு மனு­சங்க­ளோட மதிப்பு மலி­வுதான். தன்ன விட்­டுட்டு ஒல­கத்த பத்தி சிந்­திக்­கி­றவன் முட்டாள் மூடன்னு தான் சொல்­றாங்க. சுய­ந­லம்ங்­கி­றது தான் இங்க சுய வாழ்க்கை. அத விட்­டுட்டு பொது வாழ்க்­கையில் நீ ஈடு­ப­ட்டு­ தொலைச்­சி­ராதே என்று என் மன­சு மறுவி அழு­த­து.
பெண்­களின் உலகம் பிர­மா­த­மா­னது. புரி­த­லில் பிரியும் ;பிரி­­­வதில் புரியும்.
எந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கும் ஒரே காரணம் எது­வென்றால் மனசு தான் காரணம் . மனது இதையார் கட்டி
வைப்­பது . கண்­களின் வழ­ியே விழுந்த எந்த ஒரு விச­யமும் மன­மெனும் மந்­திரக் கிடங்­குக்குள் விழுந்து நம்­மை ஆட்­கோள்­கி­றது. இந்த விந்­தை­யான சக்­தியில் நானும் விழுந்­ததேன் என்­பது தான் விசித்­தி­ர­மான விந்தை . சித்ராவுடன் பேசிய பிறகு தான் தெரிந்­த­து என் வயது. அது­வரை சிறு பிள்­ளை­யா­கவே சிரித்துக்
கொண்­டி­ருந்­தேன் .இவ­ளி­ட­மெல்லாம் நாம் ஏன் பேசி­யி­ருக்க வேண்டும் என்று மானங்­கெட்ட மனசு சொன்­னாலும் கேட்க மறுக்­கி­றது என் “ஞானம்”
“ஹலோ சித்ரா
“ஹலோ “
“ம்” இழுத்தேன்
“என்ன?
ஒண்­ணுல்­ல
சொல்­லுங்க சித்ரா சினுங்­கி­னனாள்.
சொல்­லு­றது மாதிரி ஏது­மில்ல. இல்ல நீங்க ஏதோ சொல்ல வந்­தீங்க…
இல்­லை்ங்க. இல்ல சார் ஏதோ நீங்க மறைக்­கி­றீங்க
இல்­லையே … வாய்க்குள் வந்த வார்த்­தைகள் உதட்டில் விழுந்து உறைந்­து போயின.
‘‘சித்ரா ’’உதடு திறக்­கா­மலே உள்­நெஞ்சு அவள் பெயரை உரக்கச் சொல்­லி­யது.
கண்­களில் விளைந்து நின்­ற­து கண்­ணீர் .
இந்த மாதிரி ஒரு பொண்ணு கூட வாழ்க்­கைய அனு­ப­விச்­சு­ருக்­க­லா­மோ?
நல்ல நெறம் ;நல்ல உயரம் ;அழகா இருக்கா, கேக்­க­லாமா? வேணாம் ஏதா­வது தப்பா நெனச்­சிட்டா.
அசிங்­க­மா­யிரும் .
அணை உடைந்து வெள்ளமாய் வெளியே­றிய ஆசையை மெள­­ன­­­மெனும் அணைக்­கட்­டித் தேக்கி வைத்­தேன். உலர்ந்து போனது என் இதயம் ;
சித்ரா இந்­தப்­பெ­யரை உச்­ச­ரிக்­காத நேரம் என்னுள் இல்லை .அவள் என்னை முழு­வ­துமாய் ஆட்கொண்­­டாள்.
அவ­ளு­டன் அவளைப் பற்றிப் பேசு­வதை விட மற்­ற­வர்­க­ளிடம் அவ­­ளைப் ­பற்­றி நிறை­யவே பேசி­னேன்.
“”சித்ரா ரொம்ப நல்­லவ’’
“எப்­படி சொல்­­றீங்க’’
“ஆமா’’
“சித்­ராவைக் கட்­டிக்­கிட்டா நல்லா இருக்­கலாம் . நல்ல பொண்ணு அவ ;எப்­படி வேல செய்­றான்னு பாத்­தி­யா.
ஸி ஈஸ் எ வெரி டேலண்டட் பெர்சன் என பார்க்கும் எல்­லா­ஆட்­க­ளி­டமும் அவ­ளைப்­ பற்றி பகிர்ந்து கொள்வேன்.
நீ என்ன எப்­ப­வு­மே சித்ராவ பத்தி பேசிட்டு இருக்க அவள ஒனக்கு பிடிச்­சி­ருக்கா?
இல்­லையே …. மழுப்­பினேன்.
இல்ல நீ எப்பவும் அவ­ளப்­பத்தி பேசிட்டு தான் இருக்க. இது சரி­யில்­லடா இது ஒன்­னைய எங்­கயோ கொண்டு போயி விட்­டுரும்.
நண்­பர்கள் எச்­ச­ரி­த்­தார்கள்.
அப்­ப­டி­யெ­ல்லாம் எது­வு­ம­ில்­லையே.
‘‘இல்ல உண்மை .இது நீ எப்­ப­வும் அவ­ளையே பேசிட்டு இருக்கே’’
நண்­பர்கள் சொன்ன போது புரி­யாத விசயம் போகப் போகக் தெரிந்­த­து.
ஒரு நாள் இரவு எனக்கு போன் செய்தாள்.
ஹலோ
சொல்­லுங்க
‘‘நீங்க எப்­ப­வும் என்­னையே பத்­தியே எல்­லா­ர்­கிட்­டயும் பேசிட்டு இருக்­கீங்­க­ளாமே’’ அரற்றிப் பேசினாள் சித்ரா
இல்­லையே
இல்ல சும்மா சொல்­றீங்க
நெசமா நீங்­க அப்­ப­டி­தான்­. எல்லாரும் சொல்­றாங்க,
இல்­லையே, அப்­ப­டி­யெல்லாம் இல்­லையே. மழுப்­பி­னாலம் அது உண்­மை­யென்று என் கண்கள் காட்டிக் கொடுத்து விட்­ட­ன.
சகட்டு மேனிக்கு என்னைத் திட்டினாள் சித்ரா . அவள் திட்டும் வார்த்­தைகள் கூட என்­காதில் விழுந்து தேனாய் இனித்­த­ன.
ஒங்­க­ளுக்கு வேற பொண்ணே கெடைக்­க­லியா? இனிமே என்­கூட பேசா­தீங்க
இல்­ல….
பேசா­தீங்­கன்னா பேசா­தீங்­க
தீட்­டித் ­தீர்த்­தாள்.
ஏய்… சித்­­ரா….
மறு­ப­டி­யும் ஏன் பேசு­றீங்க
இல்ல சித்ரா….
வையுங்க போன கட் செய்தாள்.
ச்சே கட்­ பண்­ணிட்­டாளே .இனி நம்ம கூட பேச மாட்­டாளோ?
மனது கிடந்து பதறிய­து.
இப்ப என்ன செய்­யலாம் இனிமே சித்­ராவின் குரல நாம கேக்க முடி­யா­தோ?
குழம்­பினேன் ஒரு ஐடியா தோன்­றி­யது.
கால் ரிகார்ட­ர் சென்றேன் பதி­வான அவள் பேசி­யது அத­னையும் பதி­வா­கி­­யி­ருந்­த­து.
திரும்­ப­த்­ தி­ரும்பக் கேட்டேன்
என் சித்ரா பேசி­யது முழு­வதும் என் காதில் விழுந்து உயிரில் நிறைந்­தது. இது­வரை அவ­ள் பேசி­யதை எத்­தனை முறை கேட்­­டிருப்பேன் என்று எனக்குத் தெரி­யாது .
சித்ரா என்னை விட்­டுடச் சென்று விட்டாள். அவளின் குரலை தின­­­மும் நான் கேட்­காமல் படுப்­ப­தில்­லை.
விஞ்­ஞ­ா­னம் சில விச­யங்­க­ளுக்கு விளக்­காக இருக்கும்.
ஆனால் …. என் உயிரின் உயிர்ப்பை உயிரோடு வைத்திருக்கும் உதிரமாக இருக்கிறது என்பதே உண்மை.
ராஜா செல்­ல­முத்­து