புதிய விடியல்

எத்­த­னையோ முறை விழுந்து விழுந்து எழுந்த ராஜா­வுக்கு கடை­சியில் ஏமாற்­ற­மே எஞ்சி நின்­றது.
நம்­பிக்கைத் துரோ­கங்கள் அவனைத் துரத்திக் கொண்டே வந்­தன . யாரை நம்­பு­வது யாரை வேண்டாம் என்பது இந்த முரண்கள் அவனை முட்டி முட்டித் தள்­ளின. அதற்­காக இவன் மூலையில் முடங்­கிக்­ கி­டக்கவில்லை. முயற்­சியின் முனையில் தான் இருந்தான். இருந்தும் அவன் மனதுள் ஏதோ ஒன்று தொக்கி நின்­ற­து.
அவனுள் ஆயிரம் குதி­ரைகள் ஓடி­னாலும் எதையோ இழந்த ஏக்கப் பெரு­­மூச்சு அவ­னுள் நிறைய ஆரம்­பித்­தன.
யாரை நம்­பு­வது யாரை விடுப்­பது. நம்­பிக்கை தழுவி நங்­கூரம் அடித்த சோகத்தில் நிலை­யாக நின்­றி­ருந்தான். அவன் தோள் தட்­டவோ அவன் முயற்­சி­க­ளுக்கு முன்­னுரை எழு­தவோ யாரும் முன் வர­வில்லை .அவனிடம் லட்சியம் வேட்­­கைக்கு பூக்கள் கொடுக்க எந்தப் பிற­வியும் பிறக்க வில்­லை­யென்று துயரப் பட்­டி­ருந்தான்.
அவன் கண்ணில் படு­ப­வவர்கள் எல்லாம் அவ­னுக்கு அந்­நி­ய­மா­க பட்­ட­னர்.
ராஜா
ம்
ஒங்­க­ளோட முயற்சி என்­னாச்சு?
பண்­ணிட்டு இருக்கேன்
ஓ…..ஆனா சீக்­கி­ரமே வர­ணும். ராஜா காலம் ரொம்ப கொடூரமான கோடாலி . நம்மை நாலு அஞ்சா குத்தி கிழிச்­சுட்டு போயிரும் . எவன் ஒருத்தன் நேரத்த தன்­னே­ாட வெரல்ல வச்சு வேலை செய்து விழா கொண்­டாடுறானோ? அவன் தான் இந்த பூமி­யில பெருசா வர முடி­­யும் . அகந்தை மனம் , கால விரயம் கரையான விட ரொம்­பக் கொடூ­ர­மானது நம்­மன கரச்­சுட்டு போய்­ட்டே இருக்­கும்.
லட்­சியம் அப்­­பி­டியே தான் இருக்கும். ஆனா வயசும் இள­மையும் கர­ஞ்சு போய்­டடே இருக்கும். அறி­வுரை வார்த்­தை­களை அள்ளித் தெளித்தான் கபி­லன்
என்ன பண்­­ற­துன்னு தெரி­ய­லையே . நானும் ஓடி­யோடி தான் ஒழை­க்கி­றேன் . ஆனா எந்த முயற்­சியும் கைகு­டுக்கலையே. வருத்­தத்தின் உச்­சியில் போய் சொன்னான் ராஜ­ா
இல்லை ராஜ­ா . உன்­னோட ஆச பெருசு. அதுக்­காக நீ மெனக்­கி­டு­றதில தப்­பில்ல . போராடு போராடு. தொய்­வில்­லாம போராடு . ஒன்­னே­ாட விடி­யல் ஒன்­னோட உள்­ளங்­கையில் பெறக்கும். மேலும் உற்­சாக ஊற்­று­களை அள்ளித் தெளித்­தா­ன் கபிலன்.
அவ­னின் இனிப்பு வார்த்­தைகள் அவனுள் ஒரு பொறியைத் தட்­டி­விட்டு போர்க்­க­ளத்­திற்குள் நுழைய அவ­னுள் ஏதோ ஒன்றைப் பதியம் போட்­ட­து.
சரி நான் கண்­டிப்பா ஜெயிப்பேன் . அவனின் முது­கெ­லும்பு கொஞ்சம் நிமிர்ந்து நின்­ற­து.
ம் …. ஓடு என்ற வார்த்­தையைத் தட்டிக் கொடுத்­துப் பேசினான் . சரி என்­றான் ராஜா
அடுத்­த­டுத்த முயற்­சி­க­ளும் அவ­னுக்கு கை கொடுக்க வில்லை.
சோர்வின் பிடியில் போய் சுமையாய் உட்­கா­ர்ந்தான். இனி நம் லட்­­சியம் உல­கத்­திற்கு லாபம் தான் போல. முன்­னாடி போக முடி­யாது என்று மூச்­சி­றைத்து நின்ற போது ஓர் ஏஞ்சல் அவனுள் வந்து நிறை­ந்தாள்.
அவளின் வரு­கையில் தளைத்­தது அவனின் புதிய உலம் இந்த பூமிப்­பந்தே அவ­னுக்கு ஒரு பூப்­பந்தாய்த் தெரிந்­த­து.
அவளின் ஸ்ப­ரிசம் அவ­னுள் கோடிப் பூக்­களைக் கொத்­துக் கொத்தாய்க் பூத்துக் கொட்­டி­ய­து.
ராஜா
ஏஞ்சல் சொல்­­லுங்க
நீங்­க இவ்வ­ளவு திற­மை­யோட இருக்­கீங்க. ஆனா ஒங்­க­ளோட முயற்­சிகள் எதுவும் சரியா வர­லியே ஏன்? வலிகளை ராஜ­ாவின் விலா எலும்பில் சொரு­கி­னான்.
என்­னன்­னு தெரி­ய­லை­யே
எனக்கு என்­னமோ மாதிரி இருக்கு ஏஞ்சல் என்­னோட லட்­சியம் –இப்­ப­டியே நீர்த்துக் போகும்னு நெனைக்­கி­­றேன். கண்­க­ளில் நீரொழுக அவ­ளி­டம் ஒப்பித்தான் ராஜா.
இல்ல நீங்க இப்­படி இருந்­திங்­கன்னா கண்டிப்பா ஜெயிக்க முடி­யா­து . முட்­களை மூறையில் குத்தி முகத்தில்
புன்­னகையோடு பதில் சொன்­னாள்.
ராஜாவிற்கு இது ஒரு புரி­யாத புதி­ரா­கவே இருந்தது.
நான் நல்லா­தானே உழைக்­கி­றேன் .பெறகு எப்­படி எனக்கு மட்டும் இப்­படி நடக்­­குது .குமு­றல்­ கு­ரல் குரல் அல­னையைப் பிடித்­து இறுக்­கி­ய­து.
நீ இப்­ப­டியே இருந்தா ஒன்­னோட வெற்றி தள்ளி போய்கிட்டேதான் இருக்கும்
எப்­ப­டி? கேள்­வி­யாய்க் கேட்டான் ராஜா
விட்டில் பூச்­ச­ி­களை விண்­மீன்களா விளம்பரம் செஞ்­சிட்டு இருக்­கிற இந்த ஒல­கத்­தில சூரி­ய­னா சொலிக்­கிற நீ சோம்பிப் போய் இழுக்­கி­ற­துக்கு முதல் காரணம் ஒன்­னோட இயல்பு. இங்க சோட­னைதான் பெருசா இருக்கு வெத்து வார்­ததைகள் தான் விளம்­ப­ர­மா இருக்கு. நீ மாறணும் என்­றாள்.
எப்­படி
ஒன்­னோட டிரஸ் பேச்சு நட­வ­டிக்கை இதெ­ல்லாம் மாத்­தனும்
எப்­படி?
நான் சொல்லித் தாரேன்.
ஏஞ்சல் அன்று முதல் ராஜாவின் இன்­னொரு உயி­ரானாள். கிரா­மத்து மனி­தனை ஒரு நாக­ரீ­க­மான மனி­த­­னாக மாற்­றினாள்.
நீ எங்க ஹேர் கட் பண்­ணுவே?
ரவி சலூன்­
மொதல்ல சலூான மாத்­தனும்
ம்
ஏன் இப்­படி டிரஸ் பண்ற?
ஏன்?
இது சரி­பட்டு வராது . அவனின் உடையை மாற்­றி­னாள்.
நீ இப்­படி நடக்­கக்­ கூ­டாது பெறகு எப்ப­டி?
“ம் …இப்­படி நடக்­கணும் என நடந்து காட்­டினாள்.
நீ இங்­கிலீஸ் பேசு­வி­யா?
இல்­ல
கண்­டிப்பா பேச­ணும்
அவனின் உதடுகள் அந்­நிய மொழி பேச அவனை தயார் செய்தாள்.
அவனின் உலகம் இப்­போது உற்சாகத்தின் உற்­ச­வத்தில் இருந்­தது.
ராஜா இப்­போது நம்­பிக்கை மனி­த­னாக மாறி­னாள்.
வெற்றி என்­பது அவனின் விரலில் பூக்கும் பூவாய்த் தெரிந்­த­து.
அவனை முழு மனி­த­னாக மாற்­றி­­விட்டு எங்கோ சென்றாள்.
அவனின் புதிய விடி­ய­லுக்கு விதையாய் இருந்த அவள் எங்கு சென்றாள் என்­பத தெரி­ய­வில்லை.

ராஜ­­ா செல்­ல­முத்­து