கண்­பேசும் வார்த்­தைகள்

கண்­பேசும் வார்த்­தைகள்

ஜென்ஸி இருந்தப் பெய­ரை உச்­ச­ரிக்கும் போதெல்லாம் என் உத­டு­க­ளுக்­குள் ஓர் உற்­சாகம் பிறக்கும்.
உயி­ருக்குள் ஓர் திரு­வி­ழாவே நடக்கும்.
காதல் …. பேசும் போது பிறக்கும் உணர்ச்­சி­களை விட உருவம் மறக்கும் போதி­ருக்கும் உணர்­ச்சிகளுக்கு வீரியம் அதிகம்
ஜென்­­ஸியும் அப்­­பி­டித்­தான். எனக்கு சிநேகம் . உட­னி­ருக்கும் போது இருக்கும் உறுத்­தலை விட என்னை விட்டு தூரம் போன பிறகு இருக்கும் தூய­ரத்தின் உயரம் அதி­கம்.
ஜென்­­ஸி அழுகு தான். அவ­ளுடன் பேசு­ம் போது றெக்கையே முளைக்கும் .உற்சா­கத்தின் ஊற்றாய்இருப்பாள்.
சேர்ந்­தி­ருக்கும் பேதெல்லாம் சண்­­டையே மிஞ்சும்
ஏய்… நீ சொல்­ற­து சரி­யில்ல,
நீ சொல்­றது மட்டும் சரி­யா?
ஆமா…
என்ன ஆமா….
சரி
என்ன சரி
விவா­தங்கள் மற்றிப் போய் விப­­ரீ­தங்­கள் விளையும்
ஜென்ஸி
ம்…
கோவிச்­சிட்­டயா?
இல்­லையே
ஒன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்
எனக்கு பிடிக்­­கல
சும்மா தான சொல்­ற?
இல்ல நெசம். ஏய்…. லூசு சும்மா தான சொன்ன?
டேய் அர­மண்ட…. நாம சொன்­னது நெசம்
உண்­மை­யா­வாப்பா,
ஆமாடா…
அவள் சும்மா சொன்ன வார்­த­தை­­க­ளி­லேயே சோகம் தொக்க நிற்கும்
ஜென்ஸி நானும் ஒரே அலு­வ­ல­கத்தில் வேலை பார்த்­தோம். இருக்­கை­கள் இரண்­டாக இருந்தாலும் இதயம் மட்டும் ஒரே நாற்­கா­லியில் ஏறி உட்­கார்ந்து கொண்­டது. அவள் பேசு­வது என் காதில் விழ வேண்­டு­மென்று மனசு சொல்லும். அவள் முகம் பார்ப்­ப­தை­யே சுக­மென்று இதயம் சொல்லும் .அவளின் காதோர முடி கன்­னக்­க­துப்பில் விழு­வதைக் காதல் சொல்­லும்.
ஒரு நாள் இரண்டு நாள் ஜென்ஸி வர­வில்லை என்றால் இதயம் காகி­தமாய் வானில் பறக்­கும்.
அவளின் நினை­வுகள் வளைய வளைய வந்து என்னுள் நிறை­­யும். உடன் இருக்கும் போதெல்லாம் ஒரு குழந்­தையைப் போல் கொண்­டா­டிய மனது அவள் இல்­லை­யென்ற பிற­கு வலி. என்ன சொல்ல? எல்லாம் சில காலம்தான்.
மனி­தர்­களை ஏமாற்றத் தெரிந்த மனி­தர்­க­ளுக்கு மத்­தியில் என் மனதை எனக்கு ஏமாற்­றத்­தெ­ரி­ய­வில்லை. தெளிந்த நீரோ­டையில் விழும் நிலா நிழலாய் நிறை­கி­றது அவளின் நிஜம்.
சில சம்­ப­வங்கள் சிநே­கிக்கும் போது கிடை­ப்­ப­தில்லை வில­ககம் போது தான் வலிக்­கி­ற­து.
எப்­போது போல இருந்­தி­ருக்க வேண்­டிய மனசு ஏமாறும் போது தான் ஏக்க­மா­கி­றது. ஜென்ஸி கூட அப்­ப­டித்தான் ஒரு விளை­யாட்­டா­ய் ஆர­­ம்­பித்த பழக்கம் இப்­போது மற்கக முடி­யாமல் என்னை மழு­ங்­க­டிக்­கி­றது.
எப்­போது பெண்­க­ளிடம் எட்­டி­யி­ருப்­பது தான் சிறந்­தது. ஒட்டிய பிறகு எட்­டி­யி­ருப்­பது எட்­டிக்­கா­யா­யி­ருக்கும். ஜென்ஸி கூட அப்­ப­டித்தான். இட­­மா­றுதல் கூட சில நேரங்­களில் இத­யத்தை உடைத்­து­விடும். பணி­மாற்றம் இட­மாற்றம் இரண்டும் சின்ன இதயக் கூட்­­டுக்குள் பல சில­வை­களை என்னுள் அறைந்து வைத்தன.
மலர்க்­கீ­ரிடம் தரித்­தி­ருந்­தா­லும் அது முட்­கி­ரீ­டங்­க­ளா­னவே என்னுள் முளைத்­தன.
அவ­­ளுக்கு வேண்­டு­மானால் அது சாதா­ர­ண­மாக இருக்­கலாம், அது எனக்கு ரணம் வெளியில் பேசிக் சிரித்­தாலும் உள்­ளுக்குள் எரிந்து கொண்­டி­ருக்கும் எரி­­ம­லையின் வெப்­பத்தை அவள் எப்­போது உணர்வாள். சத்தி­யமாய் உணர மாட்டாள். ஏனெனில் பெண்­களின் பூமி பூக்­க­ளாய் புனை­யப்­பட்­டது. ஆண்­களின் உலகம் முட்­களால் வேயப்­பட்­டது. ஓர் ஆண் இத­யத்தின் ஒரு மடங்கு கூட பெண்­க­ளுக்கு ஈரம் என்­ப­தில்­லை.
விழா கொண்­டா­டு­பவன் பெண்­ணா­கிறான். வேத­னைப்­ப­டு­பவன் ஆணா­கிறான். என் இதயம் படும் வேத­னையின் துயரம் அவ­ளுக்கு தெரி­யுமா? வாய்ப்­பில்லை தான். சம்­ப­­ளங்­களால் சந்­­தோ­சப்­படும் சம்­­சா­ரி­க­ளுக்கு காதல் என்­பது வட்டுக் கருப்­பட்டி தான்.
ஜென்ஸி கூட அப்­படித்தான் விளக்கு தான் ஏற்றி வைத்தாள். விளக்கு தான் ஏற்றி வைத்தாள் என்று நினை­த்­
தி­ருந்தேன் . ஆனால் விறகுகளை அடுக்கி எனக்குள் தீ வைத்து விட்டாள்.அதை அவள் உணர்­வா­ளா?
உண­ர­மாட்­டாள்.
சில­ருக்கு பூக்கள் என்­பது அழகு. சில­ருக்கு உண்மை; ஜென்­ஸிக்கு இந்த இரண்டும் இல்லை .போலியாய் பழ­கிய பொழுதுகளை உண்­மை­யென்று உணர்ந்த இத­யத்­தி­ற்கு எப்­படிச் சொல்­­வது ஜென்ஸி பொய்­யா­னவள் என்று அவளின் கண்­களைப் பாரத்துப் பேசிய எனக்கு இன்று அது பெரிய காயமாய் இருக்­கி­றது
அலு­வ­லக இட­மா­றுதல் இத­யத்தை இட­மாற்­று­மா? மாற்றி விட்­டதே…
அவள் வேண்­டு­மா­னால் என்னை மறந்­தி­ருக்­க­லாம்.
அவள்  கண்  பேசிய வார்த்­தை­க­ளுக்கு அர்த்தம் இன்னும் என்னுள் அழி­யா­ம­லி­ருக்­கி­ற­து.
ஜென்ஸி ஒரு காதல்
கல்­­வெட்­டு