லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

மேலூர், டிச.7–
மேலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் சார்பில் மேலூரில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மேலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் சார்பாக மேலூர் ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் குழந்தை புற்று நோய் விழிப்புணர்வு முகாம் சங்கத் தலைவர் பா.எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் லயன்.ஈ.ஆர்.வி.முருகேசன் முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட குழந்தை புற்று நோய் தலைவர் கிரியேட்டிவ் லயன்.பி.ராதாகிருஷ்ணன், புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் உணவு வகைகளை விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி தாளாளர் லயன்.பி.ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். மாணவ மாணவியரும் தங்களது புரிந்துணர்வை விளக்கி கூறினார்கள். இந்த முகாமில் மேலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்க செயலர்.லயன்.சி.கோயிலான், பொருளாளர் லயன்.வி.சந்திரசேகரன் மற்றும் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.