முதுமை

பெரியசாமி கொஞ்சம் தடுமாறியபடியே நடந்துகொண்டிருந்தார். அவரின் எல்லா வேலைகளையும் அவரே செய்தார். கீழே விழப்போவதென அவரின் நடவடிக்கை இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்பு பெரியசாமியின் அருகில் வந்தான்.
” தாத்தா”
“ம்… சொல்லுடா”
இந்த வயசான காலத்தில ஏன் இப்படி கஷ்டப்பட்டு இருக்க.  வீட்டுல இருக்க வேண்டியது தான”
“டேய் யாருக்கு வயசாயிருச்சு . நான் வைரம் பாஞ்ச கட்டைடா என்னோட ஒடம்புக்கு தான் வயசாயிருச்சேயொழிய என்னோட உணர்வுக்கு வயசு எப்பவும் பதினாறு தான்.
“ம்க்கும் இப்படித்தான் சொல்ற . ஆனா கீழ விழப்போறது மாதிரி போனியே
“இல்லையே ….. யார் சொன்னா இது பித்த மயக்கம்டா
நீ இப்படியே … பொய் சொல்லிட்டே இரு ஒரு நாள் எங்கியாவது வழுந்து தான் கெடக்கப் போற” எச்சரித்தான் அன்பு, இது எதையும் சட்டை செய்யாமல் பெரியசாமி எங்கு போனாலும் தனியே அலைந்து கொண்டிருந்தார்.
வயது எண்பதைக்கடந்து இன்னும் எட்டியிருந்தது.
“தாத்தா”
“ம்”
ஒங்களுக்கு எத்தன புள்ளைங்க
“அஞ்சு”
ரெண்டு பொம்பளப் புள்ளைக ;மூணு ஆம்பளைப்பயக ;எல்லாருக்கும் கல்யாணம் காச்சி முடிச்சு அதுக  பேரன் பேத்திகளுக்கு கூட கல்யாணம் பண்ணியாச்சு. ஏன் நீங்க அங்கெல்லாம் போறதில்லையா?
“ம்ஹீகும்”
ஒன்னோட வீட்டுக்காரம்மா எங்க இருக்காங்க”
வீட்டுல”
அவங்களாவது போவாங்களா”மாட்டாங்களா?
இல்ல போகமாட்டாங்க”
“ஓ கோ”
“ஏன் இந்த வயசில இவ்வளவு பிடிவாதம் தாத்தா?”
“இது பிடிவாதம் இல்லப்பா”
“சுயகௌரவம் “
“சுயகௌரவம்”சுயகெரவுமா?
ஆமா” எப்பவும்  யாருக்கும் நாம பாரமா இருக்கக்கூடாது. பெறந்தோம்; வளர்ந்தோம்; புள்ளைகள பெத்தோம்; அவங்க கல்யாணம் பண்ணி புள்ளைகள பெத்தாங்க அவங்க வாழ்றாங்க;  இதுல எதுக்கு ஆடுத்தவங்களை நம்பி வாழனும் ;அவங்க புள்ளைகள பாக்க வீட்டு வேலைகள செய்ய அவங்க எப்ப சாப்பாடு தாராங்களோ அத சாப்பிட்டு இருக்க இதெல்லாம் முடியாதுப்பா. நாம சந்தோசமா இருக்கணும் .யார் கிட்டயும் அடிமையா இருக்க கூடாது.
அவங்க கட்டளப்படி நடக்கக் கூடாது.
புதுசா இருக்கே.
“இது என்ன புதுசுப்பா. நமக்குன்னு ஒரு பிடிப்பு இருக்கணும் .யாரையும் நம்பக்கூடாது . நாமளோட வாழ்க்கைய நாமளே பாத்துக்கிரணும்;  அப்படி இருந்ததானா நாம யாருக்கும் அடிபணிஞ்சு இருக்கணும்னு அவசியமில்ல ; எப்படி பெறந்தமோ நாம அப்படியே சுதந்திரமா எறந்து போகலாம்.
“ம்.”
இதவிட்டுட்டு அடுத்தவங்கள நம்பிநம்பி நாம நம்மோட பலத்த எழந்திர்றோம் . அடுத்தவனோட கைய எதிர்பார்த்து வாழ ஆரம்பிச்சிர்றோம் . அதுதான் நம்ம முதியோர்கள் செய்ற பெரிய முட்டாள் தனம் என்றார் பெரிய சாமி.
அவரின் நடையில் தளர்ச்சி தெரிந்தாலும் பேச்சில் ஒரு கம்பீரம் இருந்தது.
” தாத்தா ஒங்களோட மாதிரி இருக்கு”
என்றான் அன்பு.  இது நான் கத்துட்ட உண்மை தம்பி. இது வாழ்றதுக்கு மட்டுமில்ல வாழ்றதுக்கு
உயர்றதுக்கும் தான் . அடுத்தவங்களோட கைய நாம என்னைக்கு நம்ப ஆரம்பிக்கிறமோ அன்னைக்கே நாம பலமிழந்து போறோம்., என்ற படியே யோகா செய்ய ஆரம்பித்தார்.
அன்பு அவரைப் பார்த்து ஆர்ச்சர்யம் அளந்தான்.
“தாத்தா ஒங்கள மாதிரி இருக்கிற பெருசுங்க.  இப்படி இருந்திட்டா இங்கு பிரச்சினையே வராது .
“அது மட்டுமில்ல அன்பு வயசான எல்லாருக்கும் முதியோர் இல்லம் அது இதுன்னு கட்டணுமுனு
அவசியமிருக்காது.  இதெல்லாம் மனுசனோட மனசு பலமிழக்கிறதுனால வர்ற வேல . நீங்களா எந்திரிச்சு நில்லுங்க ஒருபயலும் ஒங்க கூட நிக்க முடியாது.
இதுதான் மனுச வாழ்க்கை. இதுதான் கரவுமான வாழ்க்கை.
“தாத்தா “
“ம்”
இதெல்லாம் நீங்க எங்க இருந்து கத்திட்டுங்க?
அன்பு கேட்கவும் கொஞ்சம் கூட சோம்பல் இல்லாமல் யோகா செய்ய ஆரம்பித்தார் பெரியசாமி.
“தாத்தா ” நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே
தம்பி…. இதெல்லாம் யார் கத்துத்  தரணும்? ஒவ்வொரு மனுசனுக்கும் இந்த கவுரவ இருக்கணும்பா ?இந்த நல்ல அறிவையெல்லாம் மனுசங்க கிட்ட இருந்து கத்துக்கல . மிருகங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன்’’
‘‘மிருகங்கக் கிட்ட இருந்தா?’’ ஆச்சர்யமாக கேட்டான்  அன்பு .
“ஆமா அன்பு. எந்த விலங்காவது வயாசன அப்பெறம்  அதோட குட்டிகள நம்பி வாழுதா? இல்ல அந்த குட்டிக தனக்கு இரை கொண்டுவந்து தரணும்னு சண்ட போடுதா?
“இல்லையே….’’
“அப்பிடிதனான . குட்டி போடும்போதோ  இல்ல முட்ட போட்டு குஞ்சு பொறிச்சு  தன்னோட வாரிசுகள
உருவாக்கிட்டோம்னு சண்ட போடுதா?’’
”  தாத்தா நீங்க சொல்றது. ஆச்சரியமா இருக்கே.
ஆச்சர்யமா இருக்கா? இதுல என்ன ஆச்சர்யம் தம்பி . நான் சொன்னதை கொஞ்சம் யோசுச்சுப் பாரு. உண்மை தெரியும். கவுரமா மிருகங்கள் தான் வாழ்த்திட்டு இருக்கு. எந்த சிங்கமாவது தன்னோட குட்டி வீட்டில சோத்துக்கு ஒக்காந்திருக்கா? இல்ல எந்தக் குரங்காவது தன்னோட வாரிசு தான் கஞ்சி ஊத்தணு சொல்லுதா ? இல்லையே இந்த மனுசனுகதான் வாரிசுப் புள்ளைகதான் சோறு ஊத்தணும் ; கடைசியில காப்பாத்தணும்னு பினாத்திக் கிட்டு இருக்காணுக” என்று சொன்னபடியே யோகா செய்ய ஆரம்பித்தார்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அன்பு ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனான்.
அப்போது பெரியசாமி தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்து தன் உழைக்கும் திறனைப் பெருக்கிக் கொண்டிருந்தார்.
அன்புவுக்கு புதிய ஞானம் பிறந்தது.
அதோடு தன் முதுமையிலும் தன்மானத்தோடு  வாழவேண்டுமென்ற வைராக்கியத்துடன் நிமிர்ந்து நடந்து போய்க் இருந்தான் .

ராஜா செல்லமுத்து