மதுரை காமராஜர் பல்கலைகழக தடகள போட்டி:

மதுரை,டிச.7–
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் ஆடவர் பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியும் மகளிர் பிரிவில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன.
மதுரை காமராஜர் பல்கலைகழத்துக்கு உட்ட கல்லூரிகளுக்கு அடையிலான 52–வது ஆண்டு தடகளப் போட்டிகள் மதுரை எம்.ஜி.ஆர்.விளையாட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தடளப்போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி மற்றும் டோக் பெருமாட்டி கல்லூர் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றன. அதே போல மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் பாத்திமா கல்லூரி மற்றும் பாத்திமா கல்லூர் இரண்டாம் இடத்தைப் பெற்றன.
ஆடவர் பிரிவில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர் கபில் ஆனந்த், மகளிர் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி மாணவி சரண்யா தேவி ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பை, சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் வி.சின்னையா, சிண்டிகேட் உறுப்பினர் எம்.லெல்லிஸ் திவாகர், உடற்கல்வித்துறை இயக்குநர் வி.ஜெயவீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.