புதிய ரோல்ஸ் ராய்ஸ் சுற்றுலா கார்;

சென்னை, டிச.7,
50 ஆண்டுகளை நிறைவுசெய்து பொன்விழா காணும் பர்வீன் டிராவல்சி-ன் தாய் நிறுவனமான ஏபி பிசினஸ் எண்டர்பிரைசஸ், தனது வாகன தொகுப்பில் வெளிநாட்டு பயணிகள் நட்சத்திர ஓட்டல் சுற்றுலா பயணிகளுக்கு ரோல்ஸ்-ராய்ஸ் காரை அறிமுகம் செய்து உள்ளது.
2019ம் ஆண்டுக்குள் பேட்டரியில் இயங்கும் 100 சொகுசு பஸ்கள் வெளியிடப்படும். தீவிர வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, ரூ.250 கோடிக்கு தனிநபர் பங்கு முதலீட்டை திரட்ட முதலீட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்று இதன் தலைவர் முகமது ஏ.அப்துல் தெரிவித்தார்.
பிரபலமான பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் கொண்டாட்டத்தில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 300க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
இதன் 50-ஆண்டுகால பயணத்தை விளக்கும் புத்தகத்தை தலைமை விருந்தினராக பங்கேற்ற ஆர்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி வெளியிட்டார்.
இவ்விழாவிற்கு, இந்து தலைவர் என்.முரளி மற்றும் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் துணை தலைமை இயக்குநர் (தெற்கு), ஸ்ரீவத்ஸ் சஞ்சய் ஆகியோர் பங்கேற்றனர்.
ரோல்ஸ்-ராய்ஸ் சொகுசுக் காரை இது புதிதாக இணைத்திருக்கிறது. இந்த சொகுசு கார், பிரபலங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சர்வதேச பயணிகளின் தேவைகளை புர்த்தி செய்ய பயன்படுத்தப்படும்.
தனது விரிவாக்க திட்டத்திற்காக வரவிருக்கும் மாதங்களில் தனிநபர் பங்குத் தொகையாக 250 கோடி ரூபாயை திரட்ட முதலீட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தலைவர் முகமது ஏ.அப்துல் தெரிவித்தார்.
சிசெபல் நிறுவனத்தோடு ஒப்பந்தம்
பயணிகளின் போக்குவரத்துக்காக இந்திய சாலைகளில் வெவ்வேறு நகரங்களுக்கிடையே பேட்டரியின் மூலம் இயங்குகின்ற 100 சொகுசு பேருந்துகளை அறிமுகம் செய்வதற்கு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த “சிசெபல்” என்ற நிறுவனத்தோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏபி பிசினஸ் எண்டர்பிரைஸ் கையெழுத்திட்டிருக்கிறது. ரூ.250 கோடிக்கு தனிநபர் சமப்பங்கு தொகையை திரட்டுவதற்காக பல்வேறு முதலீட்டு வங்கிகளுடன் இந்நிறுவனம் பேசிவருகிறது.
1967ம் ஆண்டில் ஒரு எளிமையான தொடக்கத்துடன் இத்துறையில் கால்பதித்த ஏபி எண்டர்பிரைசஸ், 1500க்கும் அதிகமான வாகனங்கள் கொண்ட ஒரு மிகப்பெரிய நிறுவனமாக மாபெரும் வளர்ச்சியை தனது அர்ப்பணிப்பு உணர்வாலும், கடும் உழைப்பாலும் எட்டியிருக்கிறது. தென்னிந்தியாவில் மக்களால் அதிகம் விரும்பப்படுகிற பயணச்சேவை நிறுவனமாக இன்றைக்கு இது உருவெடுத்திருக்கிறது என்று முகமது ஏ.அப்துல்.
ஏபி பிசினஸ் எண்டர்பிரைசஸ், நிறுவனத்தை காலஞ்சென்ற ஜனாப் அல்லா பக்ஷ் 1967ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். ஒரு மிகப்பெரிய பயண மற்றும் போக்குவரத்து பெருநிறுவனமாக வளர்ச்சியடைந்திருக்கும் இதில், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், விருந்தோம்பல் துறை, ஆட்டோமொபைல்ஸ், சுற்றுலா, பயிற்சி மற்றும் ஆலோசனை என ஏழு தனித்தனிப் பிரிவுகள் இயங்கிவருகின்றன என்றார் அவர்.