டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார் விராட் கோலி

புதுடெல்லி,டிச.7–
இலங்கைக்கு எதிரான தொடரில் 610 ரன்கள் விளாசிய விராட்  கோலி, டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு  முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின்  கேப்டன் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை  சதங்கள் அடித்து அசத்தினார். இலங்கைக்கு எதிரான தொடரில் விராட் கோலி 610  ரன்களை குவித்தார். இதன்காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  பேட்ஸ்மேன்களின் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி, இரண்டாம் இடத்துக்கு  முன்னேறியுள்ளார். 893 புள்ளிகளுடன் விராட் கோலி 2-ஆம் இடத்தில் உள்ளார்.
முதல்  இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் 938 புள்ளிகளுடன்  உள்ளார். மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 879 புள்ளிகளுடன்  உள்ளார். 4 ஆம் இடத்தில் புஜாரா உள்ளார். அணிகளை பொறுத்தவரை இந்திய அணி  தொடந்து முதலிடத்தில் உள்ளது.