டி.வி.எஸ். அப்பாச்சி மோட்டார் சைக்கிள்:

சென்னை, டிச. 7–
மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ், புதிய மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு பேசுகையில் கூறியதாவது:–
இரு சக்கர வாகன சந்தையில், பிரத்யேக மாடலில் ஆர்ஆர் 310 மாடலை உருவாக்கியுள்ளோம். ஸ்போர்ட்ஸ் பிரியர்களை ஈர்க்கும் விதமாக இந்த மாடல் இருக்கும்.
வெர்டிக்கல் ஸ்பீடா மீட்டர், லிக்விட் கூலிங் சிஸ்டம் மற்றும் ஆயில் கூலிங் சிஸ்டம் என மேம்படுத்தப்பட்டுள்ளதால் என்ஜின் செயல்திறன் அதிகரிக்கும். மேம்படுத்தப்பட்ட ஏரோ டைனமிக் வசதியால், அதிகபட்ச வேகம் மற்றும் வளைவுகளில் எளிதாக திருப்பலாம். இந்த மாத இறுதியில் இருந்து இந்த வாகனத்துக்கான முன்பதிவு தொடங்குகிறது.
இருசக்கர வாகன சந்தையில் டிவிஎஸ் நிறுவவனம் 14% சந்தையை வைத்துள்ளது. நடப்பாண்டில் இந்த மாடலுக்கான விற்பனை இலக்கு வைக்கவில்லை என்றாலும், 10,000 வாகனம் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த மாடல் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் தயாராகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து விரைவில் புதிய மாடல்கள் அறிமுகமாகும். அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலில் விற்பனையக விலை ரூ.2.05 லட்சத்திலிருந்து தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.   ரேஸ் வழித்தடத்தில் 35 ஆண்டுகள் கற்றுக்கொண்ட பாடங்களை மிக நவீன தொழில்நுட்பத்தோடு இணைத்திருப்பதன் நேர்த்தியான வெளிப்பாடாக இது இருப்பதால், எமது தயாரிப்புகளின் அணிவரிசையில் அதிநவீன மற்றும் பிரத்யேக வழங்கலாக டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர் 310 விளங்குகிறது. ரேஸிங் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வாகன சவாரி இயக்கவியல்புகள் ஆகியவற்றின் மிகச்சரியான ஒருங்கிணைப்பாக இந்த பைக் இருப்பதை வாடிக்கையாளர்கள் நிச்சயம் கருதுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நாம்புகிறோம்,”
இவ்வாறு அவர் கூறினார்.
கே.என். ராதாகிருஷ்ணன்
நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரியான கே.என். ராதாகிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது:–
அப்பாச்சி 150சிசி பைக்கின் வழியாக எமது ப்ரீமியம் பிராண்ட்-ஐ நாங்கள் கட்டமைக்க தொடங்கி, 180சிசி மற்றம் 200சிசி பைக்குகளின் அறிமுகம் மூலம் வாடிக்கையாளர்களின் அபிலாசைகளை இன்னும் உயர்த்துவதில் வெற்றிகண்டோம் என்றார்.