ஜூவல்லரி, ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் குவிந்த போரூர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை, டிச. 7–
சில்லரை வணிகத்தில் முன்னணி நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்–ன் 4வது மெகா ஷோரூம் திறப்பு விழா போரூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிறுவனர் ராஜரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ரேவதி ராஜரத்தினம் குத்துவிளக்கேற்றினார். நிர்வாக இயக்குனர் சபாபதி வரவேற்றார்.
ரெங்கநாதன் தெருவில் 1966ம் ஆண்டு சில்லரை வணிகத்தில் தடம் பதித்த இந்நிறுவனம் அலுமினியம், எவர்சில்வர் பாத்திரம் விற்பனையைத் தொடங்கி ஜவுளி, ரெடிமேட், பட்டு, அழகு சாதன பொருட்கள், காலணிகள், ஆப்டிக்கல்ஸ், எலெக்ட்ரானிக் பொருட்கள், மொபைல் போன்கள், பர்னிச்சர், மளிகை, காய்கறிகள் மற்றும் பழங்கள் என சிறகை விரித்து முத்திரை பதித்து வருகிறது. ரெங்கநாதன் தெருவிலிருந்து மெல்ல மெல்ல புரசைவாக்கம், குரோம்பேட்டை நகர்ந்து தற்போது 4வது மெகா ஷோரூமை போரூரில் திறந்து தனி முத்திரை பதித்துள்ளது.
ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் தனி முத்திரை பதித்து வரும் இந்நிறுவனம் முதல் முறையாக போரூரில் டெக்ஸ்டைலுடன் ஜூவல்லரியும் இணைந்த மெகா சூப்பர் ஸ்டோராக திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்து மக்கள் தங்க நகைகளை அணிவதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் பணம், நிலத்தில் முதலீடு செய்வதற்கு இணையாக தங்கத்தை சேமிக்கின்ற பழக்கம் நடைமுறையில் இருப்பதால் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப மெகா ஸ்டோர்களில் ஜவுளியுடன் இணைந்த ஜூவல்லரி ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. விரும்பி அணியும் ஆபரணங்களில் தூய தங்கத்தில், துல்லியமான, நேர்த்தியான டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட உயர் தரத்தில் எழில்மிகு ஜொலிப்புடன் தங்கம் மற்றும் வைர நகைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
சூப்பர் சரவணா ஸ்டோர் போரூர் மெகா சூப்பர் ஸ்டோர்களில் முதல் முறையாக ஜுவல்லரி தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று முதல் 11ம் தேதி வரை )  தங்கத்தின் சந்தை விலையை விட சவரனுக்கு ரூ.1000 குறைவாக அதாவது ஒரு கிராமிற்கு ரூ. 125 சலுகையாக வழங்கப்படுகிறது.
10 தளங்கள்
வாடிக்கையாளர்கள் சொகுசாக வாங்குவதற்கு வசதியாக ஒவ்வொரு மாடிலும் எஸ்கலேட்டர் வசதி உண்டு. 3 லட்சம் சதுர அடி பரப்பில் ஷோரூம் அமைந்துள்ளது.
அனைத்து ஷோருமிலும்
நகை கடை
திறப்பு விழா நிகழ்ச்சியின் போது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ராஜரத்தினம் கூறும்போது, இனி வரும்காலத்தில் தொடங்கப்படும் புதிய ஸ்டோர்களில் டெக்ஸ்டைலுடன் ஒருங்கிணைந்த நகை கடை திறக்கப்படும். ஏற்கனவே இயங்கி வரும் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை ஸ்டோர்ஸ்களிலும் விரைவில் ஜூவல்லரி திறக்கப்படும் என்றார்.
நிர்வாக இயக்குனர் சபாபதி, சுனிதா சபாபதி, ரோஷன் ஸ்ரீ ரத்னம் மற்றும் யோகேஷ் ஸ்ரீ ரத்னம் ஆகியோர் உடனிருந்தனர்.