சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கம் சார்பில் கட்டிட பொருள் கண்காட்சி

சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கம் மற்றும் அதன் அறக்கட்டளை சார்பில், கட்டுமான பொருட்கள் கண்காட்சி, 8ந் தேதி துவங்கி, 11ந் தேதி வரை நடைபெற உள்ளது.

சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தலைவர் டி.கதிரவன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-–

சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கம் மற்றும் சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தும், 19-ம் ஆண்டு, மாபெரும் கட்டிட பொருட்கள் கண்காட்சி, 8ந் தேதி முதல் 11ந் தேதி வரை, சாரதா கல்லூரி சாலையில் உள்ள, தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கண்காட்சியில், 180க்கும் அதிகமான அரங்குகளும், நவீன தொழில்நுட்ப பொருட்களும், 30,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் உள்ளது.

கண்காட்சியினை, சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, சிறப்புரை ஆற்றவுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் கலந்து கொள்ள உள்ளார்.

இலவச ரத்த தான முகாம்

சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தலைவர் டி.கதிரவன் தலைமை உரையாற்றுகிறார். பில்ட் எக்ஸ்போ சேர்மேன் கே.மயில்ராஜீ வரவேற்று பேசுகிறார்.

கண்காட்சியின் ஒரு பகுதியாக, சங்க அறக்கட்டளை சார்பாக நடைபெறும், இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாமை, சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்க உள்ளார்.

11ந் தேதி மாலை, கண்காட்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், மாநகராட்சி கமிஷ்னர் சதீஸ், தமிழக அனைத்து பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் கௌரவ தலைவர் ஆர்.மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள் என, டி.கதிரவன் தெரிவித்தார்.