ஆதார் எண் இணைப்பிற்கு மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி,டிச.7–
மத்திய அரசின் திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால  அவகாசம் 2018 ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும்  ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கான கால  அவகாசம் டிசம்பர் 31 உடன் முடிவடைவதாக மத்திய அரசு கூறி இருந்தது. இதனை  எதிர்த்தும், ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு அளித்த பதிலில், மத்திய அரசின்  139 சேவை மற்றும் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை  நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி  காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு  முறைப்படி நாளை  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.