ஆசியாவின் கவர்ச்சி பெண் நடிகை பிரியங்கா சோப்ரா

லண்டன்,டிச.7–
ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை  வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் 35 வயதாகும் பாலிவுட் நடிகை பிரியங்கா  சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
லண்டனை சேர்ந்த  ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின்  பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 35 வயதாகும் பாலிவுட் நடிகை  பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆசியாவின்  கவர்ச்சிப் பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த நடிகை  தீபிகா படுகோனேவை பிரியங்கா சோப்ரா தோற்கடித்துள்ளார்.
தொலைக்காட்சி  நடிகையான நியா சர்மா இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
தீபிகாவுக்கு 3வது இடமும், ஆலியா பட்டுக்கு 4-வது இடமும், பாகிஸ்தானிய  நடிகை மாஹிரா கானுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளது. ஹாலிவுட்டில்  அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா தன்னை ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாக தேர்வு  செய்ததற்காக அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.