அமெரிக்கா–தென்கொரியா கூட்டு போர் ஒத்திகையால் பதற்றம்

சென்னை, டிச. 7–
அமெரிக்கா – தென்கொரியா கூட்டாகப் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால், கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா – தென்கொரியா இணைந்து நடத்தும் போர் ஒத்திகையில்  பி 1பி குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கொரியத்  தீபகற்பத்தில் போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் தாக்கும் திறன்கொண்ட கண்டம்விட்டுக்  கண்டம் பாயும் ஏவுகணையை, கடந்த வாரம் வடகொரியா ஏவி சோதனை செய்தது. இந்தச்  சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தென்கொரியாவில்  அந்த நாட்டுப் படைகளும் அமெரிக்கப் படைகளும் கூட்டாக இணைந்து போர்  ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
இதில் அமெரிக்காவின் எப் 22, எப் 35போர் விமானங்களும் இடம்பெற்றுள்ளன.  அதேபோல் எதிரிகளின் இலக்கைக் குண்டு வீசி அழிக்கும் திறனுள்ள பி 1பி  குண்டுவீச்சு விமானங்களும் இந்தப் பயிற்சியில் இடம்பெற்று, வானில் சீறிப்  பாய்ந்தன. இதனால் கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் மேலும்  அதிகரித்துள்ளது.