நன்கொடை

“கோயில்ல நெறயா வேல இருக்கு. போனது வந்தது, அது இதுன்னு மராமத்து வேலைகளப் பாத்தாக்கூட அப்பிடி இப்படின்னு ரெண்டுமூணு லட்ச ரூவாய்க்கு மேல வந்திரும் போல .பகவானே பணத்துக்கு எங்க போறதுன்னு தெரியலயே . சுத்துச் சொவர் வேற இடியிறமாதிரியிருக்கு . இதுக்கும் ஒரு வழி பெறக்கணும் . நல்ல சொவர் வைக்கனுமே இத்தனைக்கும் ஒரே வழி பணம்.
பணத்த யார்ட்ட எப்படி வசூல் பண்றதுன்னு தெரியல ’’புலம்பினார் பூஜாரி ராமநாதன்.
அன்றிலிருந்த கோயில் வேலைகளில் கவனம் செலுத்தினார். எல்லா ஆட்களிடமும் பணம் கேட்க ஆரம்பித்தார்
ராமநாதன்.
சொல்லுங்க. நீங்க கேட்டு இல்லன்னு சொல்லக் கூடாது. அதுவும் கோயில் விவகாரம் வேற மனுசங்களுக்கு பணம் காசு குடுக்கிறதவிட கோயில் கொளத்துக்கு தர்ம காரியம் பண்றது. பெரிய புண்ணியம் ;பாக்கியம்; நல்லது பண்ணனும்னு ஆசை நெறயா இருக்கு .ஆனா ஆச இருக்கிற அளவுக்கு கடவுள் கையில காசக் குடுக்கலையே ராமநாதன் வார்த்தைகளில் வருத்தம் தடவிப் பேசிக் கொண்டிருந்தார்.
குருசாமி அந்த ஊரின் பெரிய மனிதர்
ஐயா நீங்களே இப்படிச் சொன்னா  சின்ன மனுசங்க என்ன நெனைப்பாங்க. எப்படிக் குடுப்பாங்க.
வரும் ராமநமதன், எல்லாம் வரும் கவலப்படாதீங்க? ஆறுதல் வார்த்தைகளைக் சொல்லி ராமநாதனை ஆற்றுப்படுத்தினார் குருசாமி. அன்று முதல் பூஜைக்கு வரும் அத்தனை பேரிடமும் பணம் கேட்க ஆரம்பித்தார்.
ஐயா நாங்க சாமி கும்பிட்டுட்டு பத்த ரூவா காணிக்கை போட்டுட்டு போகத்தான் வந்தோம்.நீங்கன்னு தெரியலையே பின்னும் பெறக பாப்பமே கைவிரித்தனர்.
நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ராமநாதனுக்குள் கவலை கூடுகட்ட ஆரம்பித்தது.
சிவனே ஒன்னோட ஆலயத்துக்கு இப்படி யொரு கெதியா?
மழை பேஞ்சா ஒழுகுது; இடி இடிச்சா நடுங்குது ; கோயில் கோயிலா இல்லயே. பொட்டல் காடா கெடக்கு. இதுக்கு ஒரு நல்ல வழி காட்டப்பா பூஜையின் போதே புலம்பினார்.
ஏற்றி வைத்த விளக்குகள் கவலையோடு எரிந்து கொண்டிருந்தன . பூஜை செய்வதை விட்டு விட்டு புலம்ப ஆரம்பித்தார் ராமநாதன்.
ராமநாதன் என்ன பொலம்பல் ஒண்ணுல்லயே
‘‘இல்ல நான் பாத்தனே’’
‘‘இல்லையே’’
ஆமா ராமநாதன் ஒங்களோட மனசு எங்கயோ கெடக்குன்னு நெனைக்கிறேன் .அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்க.
வச்சுராலம். ஆனா கோயில் வேல தான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே .கோயில் தான அதெல்லாம் பார்த்துக்கலாம் ராமநாதன் .
இல்லங்க இப்படி சொல்லிச் சொல்லியே டைம் ஆயிருச்சு. இன்னும் வேல தொடங்குன பாடு இல்லையே . நம்மப் படச்ச கடவுளுக்கு தெரியாதா? எத எப்படிப்பண்ணனும்னு நடக்கும்பா, எப்ப?
எப்பன்னு அந்த கடவுளத்தான் கேக்கணும் எனக் கைவிரித்தார் தனசேகர்.
கோயிலுக்கு வருவோர் போவோரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.
யாரும் ஒரு பைசா கூடத் தரவில்லை
ராமநாதனுக்குள் ரணம் குடிகொண்டது.
கடவுளே என்ன சோதனை இது? கோயில் கட்டடமே இடியப்போற நெலையில இருக்கே; என்ன பண்ணலாம் ? ராமநாதனின் புலம்பல் நின்றிபாடில்லை.
“ராமநாதன்”
“சொல்லுங்க சார்”
பேசாம நோட்டீஸ் அடிச்சு பணம் வசூல் பண்ணுவாமா?
ம்” …. நல்ல போசனை சொன்னீங்க ராமநாதன் .
இதை அரை மனதாக ஏற்றுக் கொண்ட சரி என்றார்.
மறுநாளே கோவிலின் பெயரைப்போட்டு ரசீது அடித்தார்.
ராமநாதா வசூலா?
ஆமாங்க கோயில் கட்டணும்ல .கோயில் எதுக்குப்பா ….. கோயில்ல பள்ளிக் கூடம் ஆக்குவோம் ;இல்ல யாராவது வீடு இல்லாத ஆளுகளுக்கு வீடு களா கட்டிக் குடுப்பமே என்றார் ஒருவர்.
ஐயா  கன்னத்தில் போட்டுக்கங்க .இது கோயில் மட்டுமில்லீங்க இங்க . இருக்கிற எத்தனையோ பேருக்கு அது நல்லதா பயன்படுது. என்னோட சேத்து இன்னும் எத்தனையோ பேருக்கு சோறு போடுறது மட்டுமில்லாம எல்லாத்துக்கும் பயன்படுது .சொல்லவே கூச்சமா இருக்கு. இங்க நெறயா பிச்சை எடுத்து வயித்தக்கழுவுறது மடடுமில்ல .அவங்களுக்கு படுக்கிற எடமாவும் இது இருக்கு என்றார் ராமநாதன்
அங்கே இங்கே என்று வசூல் செய்த மொத்தப் பணத்தையும் எண்ணிப்பார்த்தார். அது சில ஆயிரங்கள் கூடத் தேறவில்லை.
அப்பா சிவனே எப்ப ஒன்னோட கோயில கட்டப் போறேன். திருப்பணி வேலைகள பாக்கப் போறேனோ? புலம்பினார்.
அப்போது ரத்தினம்மாள் என்ற பிச்சைக்காரி ராமநாதனிடம் வந்தாள்.  சாமி …..சாமி….
யாரு? வியப்பாய்க் கேட்டார் ராமநாதன்.
நான்தான் ரத்தினம்மாள் கோயில் வாசல்ல பிச்ச எடுக்கிறவ.
ஐயோ அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க பிச்சை எடுக்கல. கடவுள் சன்னதியில காணிக்கை வாங்குறீங்க.
ஐயா நீங்க ரொம்ப நாளா கோயில் கட்டனும் போனது வந்தது வேல பாக்கணும்னு சொல்றீங்கள்ல.
ஆமா என்ன பண்றது. நானும் அலஞ்சு பாக்குறேன். எதுவும் நடந்த பாடில்லையே
ஐயா இந்தாங்கய்யா.
என்னம்மா இது ? ராமநாதன் கொஞ்சம் நடுங்கியப் படியே ரத்தினம் கொடுத்த பொட்டலத்தை வாங்கினார்.
‘‘பிரிச்சுப்பாருங்கய்யா’’ரத்தினம்மாள் மீண்டும் சொன்னாள்.
ரத்தினத்தையும் பொட்டலத்தை யும் பாத்துக் கொண்டே பிரித்தார்.
அம்மா என்ன இது?
ஐயா நீங்களும் எங்கெங்கயோ கேட்டுப்பாத்தீட்டீங்க. யாரும் பணம் தர்றத மாதிரி தெரியல – ஒங்களோட பொலம்பல் என்னைய பாதிச்சுருச்சு. வச்சுக்கங்கய்யா .அம்புட்டு துட்டும் ஒங்களுக்குத்தான். கோயில் கட்டுங்க ’’ என்றாள் வஉள்ளத்தியாய்.
மொத்தப் பணத்தையும் எண்ணிப்பார்ததார் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் மேல் இருந்தது.
ராமநாதனின் மனத்திற்குள் ஆயிரம் பறவைகள் பறந்தன.
ரத்தினம்மாள் கோயிலின் முன்னால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.
ராமநாதன் கண்களுக்கு ரத்தினம்மாள் அம்பாளாகவே தெரிந்தாள்.

ராஜா செல்லமுத்து