ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டு வசதி கடன் மேளா

சென்னை, டிச. 5–
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உத்சவ ஹாலில் 8ந் தேதி அன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வீட்டு வசதி கடன் மேளா நடத்துகிறது. நுழைவு கட்டணம் கிடையாது. புராசஸ் கட்டணத்தில் சலுகை உண்டு. உடனடி கடன் அனுமதி செய்யப்படும். பிரதமரின் வீட்டு வசதி கடன் மானியம் பெறலாம் என்று இதன் நிர்வாக இயக்குனர் ஆர்.வரதராஜன் தெரிவித்தார்.
இந்த நிறுவனம் 8ந் தேதி வீட்டு கடன் மேளாவை நடத்துகிறது. இந்நிறுவனம் வீடு, பிளாட் வீடு கட்டுதல், ஏற்கனவே வாங்கிய வீட்டு கடன் பிற வங்கி, நிதி நிறுவனத்திலிருந்து மாற்றுதல், ஏற்கனவே வாங்கிய கடனில் செலுத்திய தொகை கடனாக ‘டாப் அப்’ கடனாக பெறுதல் போன்ற வீட்டு வசதி கடன் உடன் அனுமதிக்கப்படும்.
வீடு, அலுவலகம் பழுதுபார்ப்பு, புதுப்பித்தல், சொத்து அடமான கடன், கமர்ஷியல் கட்டுமானம் கட்டுதல், வாங்குதலுக்கும் கடன் வழங்கப்படும்.
இந்த வீட்டு வசதி கடனுக்கு வட்டி 8.30% முதல் கிடைக்கும். இந்த மேளாவில் நுழைவு கட்டணம் கிடையாது. புராசஸ் கட்டணத்தில் சலுகை கிடைக்கும். அனைத்தும் தகுதியான பட்சத்தில் உடனடியாக கடன் அனுமதி வழங்கப்படும்.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தகுதியானவர்களுக்கு வீட்டு வசதி மானிய தொகை ரூ.2.67 லட்சம் வரை பெறலாம்.
சென்னை நகரில் 10 கிளைகளை கொண்டு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சிறப்பாக செயல்படுகிறது என்றார் ஆர்.வரதராஜன்.  இது பற்றி அறிய www.repcohome.com வலைதளத்தை பார்க்கலாம் என்றார் அவர்.