டி.வி.எஸ். மோட்டார்ஸ் விற்பனை 2.25 லட்சமாக உயர்வு;

சென்னை, டிச. 4–
பாரம்பரியம் மிக்க டி.வி.எஸ். மோட்டார்ஸ் தயாரிக்கும் பைக், ஸ்கூட்டர், ஆட்டோ விற்பனை நவம்பர் மாத்தில் மட்டும் 2.25 லட்சமாக 12% அதிகரித்துள்ளது என்று இதன் தலைமை செயல் அதிகாரி கே.என்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, நவம்பர் மாதத்தில் மொத்தம் 2,51,965 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,24,971-ஆக இருந்தது. ஆக, வாகனங்கள் விற்பனை 12% உயர்ந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 11% அதிகரித்து (2,19,088-ல் இருந்து) 2,43,323-ஆக உள்ளது.
உள்நாட்டில் இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 6% வளர்ச்சி கண்டு 2,03,138-ஆக உயர்ந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் விற்பனை 37% உயர்ந்து (67,896-ல் இருந்து) 93,202-ஆக உள்ளது.
ஸ்கூட்டர் விற்பனை 7% உயர்ந்து (73,135-ல் இருந்து) 78,397-ஆக வளர்ச்சி கண்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 47% அதிகரித்து 8,642-ஆக இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி மொத்தம் 47,207 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 32,829-ஆக இருந்தது. ஆக, ஏற்றுமதி 44% வளர்ச்சி கண்டுள்ளது என்றார் அவர்.