பாதுகாப்பு

அகிலா பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருந்தாள். அப்பா மாணிக்கம் அவளை தனது ஸ்கூட்டரில் பின்பக்கம் அமரவைத்து புத்தக மூட்டையை முன்வைத்துக் கொண்டு பள்ளியை நோக்கி விரைந்தார். என்னை பள்ளியில் விடுவதற்காக நீங்கள் இவ்வளவு சீக்கிரம் ஆபீசுக்குப் போகவேண்டுமா அப்பா என்று கேட்டாள் அகிலா . சீக்கிரம் போனால் தான் எல்லா வேலைகளையும் தாமத மின்றி உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்றார்.
மகளை இறக்கி விட்டு ஆபீசுக்குள் நுழைந்தார். வாட்ச் மேன் மட்டும் அவருக்கு காலை வணக்கம் தெரிவித்தார். ஆபீஸ் உதவியாளர் வராததால் தானே பழைய துடைக்கும் துணியை எடுத்த தன் மேஜை மற்றும் நாற்காலியை சுத்தம் செய்து கொண்டார். அவர் இருக்கைக்குமேல் இருக்கும் மின் விசிறியையும் விளக்கையும் ஒடவும் எரிக்கவும் செய்து அன்று மேஜையடியில் புதிதாக செய்ய வேண்டிய வேலைகளில் அவசரம் என்று உள்ள கோப்பை முதலில் எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.
மதியம் சாப்பாட்டு நேரத்தில் அகிலா வாங்கச் சொன்ன பென்சில் நோட்டு முதலியவற்றை ஆபீஸில் உள்ள ஸ்டேசனரி கடைக்குச் சென்று வாங்கி வந்தார். இதைப் பார்த்து கேலி செய்த நண்பர்களிடம் ஆபிசிஸ் இருக்கும் பென்சில் நோட்டை விட நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்கள் தரமாகவும் விலை குறைவாகவும் இல்லை என்ற உண்மையை எடுத்துக் கூறினார்.
மாலை ஆபீஸ் நேரம் முடிந்தவுடன் தன் இருக்கை மேலுள்ள மின்விசிறி மற்றும் விளக்கின் மின்சாரத்தை அனைத்து மேஜை மீது எந்த கோப்பும் பாக்கி வைக்காமல் அலுவலக உதவியாளரைத் தேடாமல் அவரே வேலை முடித்த கோப்புகளை மேலதிகாரியின் அறையில் கொண்டு வைத்துவிட்டு அகிலாவை அழைக்க பள்ளிக் கூடம் நோக்கி புறப்பட்டார்.
அகிலா ஸ்கூட்டரில் அமர்ந்தும் அப்பாவிடம் நான் சொன்ன பென்சில் நோட்டை வாங்கி விட்டீர்களா என்று கேட்டாள் .
அதை விட எனக்கு வேறு என்ன வேலை. சாப்பிட்டு முடிந்ததும் முதல்வேலையாக ஸ்டேசனரி ஷாப்பிற்றுச் சென்று வாங்கினேன் . மிக்க நன்றி அப்பா என்றாள் அகிலா .
இதற்கு எதற்கு நன்றியெல்லாம். இது என் கடமை என்றார் மாணிக்கம்.
வீட்டிற்குள் சென்றதும் அகிலா அப்பாவிடமிருந்து பென்சில் மற்றும் நோட்டைப் பெற்று வீட்டுப் பாடத்தை செய்ய ஆரம்பித்தாள். உள்ளிருந்து அம்மா சரோஜா அகிலா வந்து பலகாரத்தையும் காப்பியையும் சாப்பிட்டு விட்டு மற்ற வேலையைப் பார்க்கலாம் என்றார் .
இரும்மா வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றதும் அப்பாவைப் போல் தான் எல்லாம் உடனே உடனே செய்கிறாள் என்றார் கோபமாக.
என்னங்க நீங்க இவளுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கக் கூடாது. ஆம்பிள பிள்ளையா இருந்த பொம்பிளை பிள்ளையை வளர்க்கக் கூடாது. சரோஜா உனக்கு இன்னும் உலக அனுபவம் வரலை. ஆம்பிளை பிள்ளைங்க அப்பா கிட்டே ஆஸ்தியைத்தான் எதிர்பார்ப்பான்.  கல்யாணம் பண்ணிவைச்சா பொண்டாட்டி பேச்சை கேட்டு தனிக்குடித்தனம் போய் விடுவான். நம்பளை தனியாய் தவிக்கவிட்டு ஆனால் பொம்பளை பிள்ளை அப்படியில்லை. நம்ம மேலே எப்பவும் பாசமா இருப்பா புருஷன் வீட்டுக்குப் போனாலும் நம்மளை அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போவா என்றதும் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றார் சரோஜா
வீட்டுப் பாடத்தை முடித்த பின் இரவு சாப்பாட்டிற்கு அப்பாவுடன் மேஜையில் அமர்ந்தாள். அகிலா. வீட்டு வேலை சமையல்வேலை என்று ஒரு வேலையையும் கற்றுக்கொள்ளாமல் ஆம்பிளை பிள்ளை மாதிரி பள்ளிக்கூடம் படிப்புன்னு அதிலேயே உனக்கு கவனம் ரோஜா அவளை என் திட்டுற அவ இந்த வயசிலே என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறாள்.
நீ சொல்ற மாதிரி வீட்டு வேலையெல்லம் வீட்டிலே இருந்தா ஒரு மாசத்திலே கத்துக்க முடியும் ஆனாப் படிக்கற வேலை அப்படியில்ல. அவ படிச்சுப் பட்டம் வாங்கி ஒரு டீச்சர் வேலைக்குப் போனா கூட போதும் படிப்பும் வேலையும் தான் இந்த காலத்து பொண்ணுக்கு பாதுகாப்பு.
நான் என்ன படிச்சிட்டுப் பட்டம் வாங்குனவள்தானே குடும்பம் நடத்திலையா ரோஜா .என்னை மாதிரி இந்தக்காலத்துப் பையன்க நல்லவங்க இல்லை தெரிஞ்சுகோ.
அதான் சொன்னேன் . உனக்கு உலக அனுபவம் பத்தான்னு இந்தக் காலத்து பையன்கள் எவ்வளவு மோசமானவங்கன்னு  தெரியும் . பருவ வயசு வந்ததும் உடலுக்கு தீங்கு தரும் புகை பிடிப்பு மதுப்பழக்கம் போதை மருந்து உட்கொள்ளுதல்; தவறான சகவாசம் உள்ளவர்கள். தான் சம்பாதிக்க வேண்டும் எண்ணம் துளிக்கூட இல்லாதவர்கள் ; இப்பப் பாத்தியா எந்தப் பயலாவது முகத்துக்கு சவரம் செய்து அழகா இருக்காங்களா கடைசிவரை அப்பா அப்புறம் மாமனார் மூலம் பணம் பெற்று வாழத்தான் ஆசைப்படுகிறார்கள்.
வேலைக்குப் போகனும் மனைவி கிடைத்து விட்டால் அவன் வேகை்குப் போகாமல் மனைவியின் பண அட்டையை வாங்கி வைத்து தாராளமாகச் செலவு செய்வான். அதனால் தான் புருஷன் நம்பி வாழமால் தன் கையே தனக்கு உதவின்னு தனக்கு ஒரு சம்பாத்தியம் இருந்தால் தான் இந்தக் காலத்துப் பெண் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பம் நடத்த முடியும் .போதும் போதும் மொத சாப்பிட்டு முடிச்சு தூங்கப் போங்க . எனக்கு நெறைய வேலை இருக்கு என்று அறிவுரைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சரோஜா.
இவ்வளவு நேரம் அப்பா சொன்ன கருத்துக்கள் யாவும் அகிலாவின் அடிமனதில் ஆழமாகப் பதித்து விட்டது. இனி நாம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படித்துப் பட்டம் பெற்று ஏதாவது ஒரு வேலைக்குப் போளால் என் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.  யாரையும் எதிர்பார்க்கமால் சுதந்திரமாக வாழமுடியும் என்று அடுத்து என்ன படிப்பு படிக்கலாம் என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள்.
பாதுகாப்பாக வாழ படிப்பும் உத்யோகமும் முக்கியம் என்று உயர்ந்தாள் தாய் சரோஜாவும்.
கோவிந்தராம்