திரிபு

லட்சுமியம்மாள் இன்று சிறுகதை உலகின் சிகரம் .
அவள் பெயரை இலக்கிய உலகம் நன்றாகவே அறிந்திருந்தது. சிறுகதைகளுக்கு சிகரம் வைத்தாற்போல் இருந்தது அவர் எழுத்து.
லட்சுமி மேடம் ஒங்களுக்கு எப்படி இந்த எழுத்துத்திறமை வந்தது.
ஒருவர் கேட்ட கேள்விக்கு மிக ஆழமாக மூச்சுவிட்டாள் லட்சுமி மேடம்
‘‘சொல்லுங்க….’’
‘‘இந்த…. எழுத்து எப்படி உங்களுக்கு ரொம்ப நல்லா வருதுன்னு கேட்டேன்… என்று அவர் மீண்டும் கேட்டதும்  பலமாகச் சிரித்தாள் லட்சுமி.
வேண்டாங்க அது ஒரு பெரிய கத.
” இல்ல மேடம் ஒங்களோட பதில் மத்தவங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேசன் கூட இருக்கலாம் இல்லையா?
“ஓ” …. அப்படியா?
” ஆமா மேடம்”
என்னோட இந்த எழுத்துக்கெல்லாம் முக்கிய காரணம் என்னோட பையன் தான்.
ஓ.கோ. ஒங்களோட பையன் ரைட்டரா?
இல்ல ரைட்டர் ஆகணும்னு முயற்சி பண்ணுனான் முடியல.
ஏன் என்னாச்சு .
அவன் கிட்ட ஆச இருந்த அளவுக்கு முயற்சி இல்ல. பெரிய சினிமா டைரக்டர் ரைட்டர் ஆகனும்ங்கிறது அவனோட விருப்பமா இருந்துச்சு. ஆனா அதுக்காக அவன் எந்த முயற்சியும் எடுக்கலை’’
“பெறகு ? “
பெறகென்ன? ஒரு தாயா
அவனுக்கு என்னென்னமோ அட்வைஸ் பண்ணுனேன். முடியல. சும்மா ஊரச்சுத்திட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்தான். சரி.. பெத்துட்டோம் … இனிமே இவன இப்படியே விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி ஒரு இன்ஸ்டிடியூட்ல சேத்துவிட்டோம் .போனான்.
“அப்பெறம்?
“அப்பெறமென்ன …. பெருசா வரணும்னு ஆச இருந்துச்சு. ஆனா அதுக்கான முயற்சியே இல்லாம மொடங்கிக் கெடந்தான்.  டேய் சினிமாங்கிறது வானவில் மாதிரி எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது.
ஆனா நீ அதுக்காக டைம் வேஸ்ட் பண்றத விட அத நோக்கி முயற்சி செய்துகிட்டே இருக்கணும்; ரொம்ப வேகமா ஓடடனும் னு சொன்னேன் .பலலட்சங்கள செலவு பண்ணி படிக்க வச்சோம் .அவனுக்கு அங்க போறது மட்டும் தான் பெருசா  சந்தோசமா இருந்துச்சு . ஆனா அங்க இருந்து கத்துகடான்னா ம்ஹுகும் அவன் எதுவுமே அங்க கத்துக்கிறல. தெனந்தோறும்  படிடான்னு சொன்னேன். ம்ஹுகும் மருந்துக்குக்கூட அவன் வாசிக்கல. இப்படி போய்ட்டு இருந்த ஒருநாள்.
“டேய் வசந்த்”
“என்னம்மா”
நீ படிக்கற இன்ஸ்டிடியூட்ல என்னென்ன இருக்கு?
“சினிமா சம்மந்தமான எல்லாமே இருக்கும்மா?
எல்லாத்தையும் நல்லா கத்துக்கிறயா?
“ம்”
டெக்னிக்கலா கத்துக்கிறதவிட கொஞ்சம் ஏஸ்தெஸ்டிக்காவும் கத்துக்கரணும்டா.
சரியா?
“ம்”
என்ன ” ம்”
‘‘சரிம்மா”
” ஒங்க இன்ஸ்டிடியூட்ல லைப்ரரி இருக்கா?’’
‘‘இருக்கே’’
லைப்ரரி போ. அங்க நல்ல நல்ல புத்தகங்கள் இருக்கும் எடுத்துப்படி. லைப்ரரியில இருந்து புத்தகத்த வீட்டுக்கு எடுத்துட்டு வா”
“சரிம்மா”
நீ தெனந்தோறும் எறநூறு பக்கமாவத‘ வாசிக்கனும்.
“சரியா?”
“சரிம்மா”
இப்படி சொல்லி விட்ட மறுநாள்ல இருந்து தெனமும் புத்தகங்கள எடுத்திட்டு வர ஆரம்பிச்சான்
“டேய் வசந்த்”
“என்னம்மா”
புத்தகங்கள எடுத்திட்டு வந்தா மட்டும் பத்தாது அத வாசிக்கனும்டா”
‘‘சரி”
நீ பேசாம புத்தகங்கள எடுத்திட்டு வந்து தலைக்கு வச்சு படுத்திட்டா அறிவு வந்திருமா?
‘‘என்னால வாசிக்க முடியலம்மா’’
‘‘பெறகு எதுக்கு நீயெல்லாம் பெரிய டெரக்டரா ஆகனும்னு ஆசப்படுறா?’’
‘‘யார்டயாவது கத வாங்கிக்கிருவேன்ம்மா’’
“தப்புடா ஒரு படைப்பாளியா இருந்தா எல்லாம் தெரிஞ்சுக்கிரனும்’’
“ம்”
இப்படி அவன நான் தெனந்தோறும் சொல்லிச் சொல்லிப் பாத்தேன். அவன் கேக்கல புத்தகங்கள எடுத்திட்டு வாரதோட சரி ஒரு பக்கம் கூட வாசிக்க மாட்டான்.
அவனுக்கு பதிலா நான் வாசிக்க ஆரம்பிச்சேன் …. மொதல்ல என்ன ஏதுன்னு தெரியாத எனக்கு எழுத்துக்கள படிக்க படிக்க எனக்குள்ள ஒரு பெரிய ஆர்வமே தோணுச்சு .தெனமும் வாசிக்க வாசிக்க ஒரு உற்சாகம் ஊறுச்சு .எனக்கு எழுத வருப்பம் வந்தது. எங்க ஆரம்பிக்கிறதுன்னு தெரியாமே நான் எழுத ஆரம்பிச்சேன் . படிக்க படிக்க படிச்ச பிறகு எழுத எழுத எழுத்து சாதாரணமா வந்துச்சு.  இன்னைக்கு நான் பெரிய எழுத்தாளரா இருக்கேன்னா  அதுக்கு காரணம் என்னோட பையன் வசந்த தான்.
ஓ.கே நீங்க  எதுவும் ஆகனுன்னு நெனக்கல. ஆனா நீங்க பெருசா எழுத்தாளர் ஆயிட்டிங்க .ஆனா ஒங்க பையன் என்ன ஆனார்.?
பெரிதாகச் சிரித்தாள் லட்சுமி,
அவன் இன்னமும் பெரிய டைரக்டர் ஆகணும் பெரிய ரைட்டர் ஆகணும்னு நெனச்சிட்டு தான் இருக்கான். செயலில் இறங்கல. அதனால  எதுவும் நடக்கல. நான் பிள்ளை வளர்க்கும் செயலில் இருந்து எழுதும் செயலுக்கு மாறினேன்.இந்த செயல் வேகம்தான் … இந்தத் திரிபு தான் என்னைய பெரிய எழுத்தாளாராக்குச்சு என்று லட்சுமி சொன்ன போத வசந்த் வீட்டிற்குள் நுழைந்தான்.
‘‘ அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா. இனி நான் உங்களை மாதிரியே  செயல் படுவேன் ’’ என்று
சொல்லிக் கொண்டே  திரைப்படம் எடுக்கவேண்டும் என்று அவன் மனதில் கட்டியிருந்த கோட்டையை வெள்ளைத்தாள் எடுத்து வேகமாக எழுத ஆரம்பித்தான்.
வெற்றி அவனைத் தேடிவரத் தொடங்கியது.
அதைப்பார்த்த அந்த தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ராஜா செல்லமுத்து