ராமநாதபுரத்தில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள்

ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இன்று (14.11.2017) குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்,இ.ஆ.ப., அவர்கள், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:–
மாண்புமிகு முன்னாள் பாரத பிரதமர் திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அளவில்லா பாசம் கொண்டவராக  இருந்ததால், அவரது  பிறந்த தினமான நவம்பர் 14-ஆம் நாளினை ஆண்டுதோறும் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்றைய குழந்தைகள் வருங்கால இந்தியாவின் தூண்கள்.  எனவே குழந்தைகளிடம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கனிவுடன் நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.  வாழ்க்கையில் படிக்கின்ற காலங்களில் தன்னம்பிக்கையுடன் வாழவும் நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொண்டு கல்வி பாடங்களை நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.  முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல் கனவுகளை நினைவாக்க நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குழந்தைகளிடத்தில் தொிவித்தார்.
பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு குழந்தைகள் ராக்கி கயிறு கட்டினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.ச.துரைமுருகன், குழந்தைகள் வளாச்சித் திட்ட அலுவலர் திருமதி.கிருஷ்ணவேனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.