யுனைடெட் எகனாமிக் அமைப்பு சென்னை டிரேட் சென்டரில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு

சென்னை, நவ.14–
யுனைடெட் எகனாமிக் அமைப்பு சார்பில் வர்த்தக உச்சிமாநாட்டின் 2ம் பதிப்பு சென்னை வர்த்தக மையத்தில் இம்மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கருத்தரங்கு மற்றும் மாபெரும் வர்த்தக கண்காட்சி இடம்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளின் கொள்கை வகுப்பாளர்களில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக அரசின் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசின் நிதித்துறை அமைச்சர் ஹசீப் ஏ. ட்ரபு ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிஸ்கோ ஜஸ்பர் பொதுமேலாளர் ஜஹாங்கிர் முகமது, இந்தியரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைஆளுநர் ஹாரூண் ரஷீத் கான், ஜிஇபவர் தலைவர் அஸீஸ் முகமது, ஏபிபி இந்தியா நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் அகிலூர் ரஹ்மான், குளோபல் ஈக்விட்டீஸ் அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டியின் முதுநிலை நிதி மேலாளர் ஜீன் பால் கச்சூர் மற்றும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யுஷன்ஸ்- முன்னாள் உதவி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.லஷ்மிநாரயணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரம், தொழில், கல்வி மற்றும் சமூகவளர்ச்சிக்கு பயனுற உதவக்கூடிய வழிவகைகளை கலந்தாலோசித்து முடிவுக்குக்கொண்டு வருவதற்காக பல்வேறு முக்கிய பங்குவகிப்பாளர்களை ஒன்று கூட்டுவதற்குரிய ஒருதளமாக இந்த உச்சிமாநாடு விளங்குகிறது.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட தொழில் முனைவோர்களுக்கு நிதி ஏற்பாட்டு வசதி, வழிகாட்டுதல் மற்றும் உதவி வழங்குவதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும். தொழில்துறையில் சாதித்து முன்னோடிகளாக விளங்குபவர்கள்,தாங்கள் தொழிலில் சந்தித்த சவால்களை எப்படி எதிர்கொண்டு வெற்றி கண்டார்கள் என்ற தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் தொழில் தொடங்குபவர்களுக்கும் மற்றும் துளிர்த்துவரும் தொழில் முனைவோர்களுக்கும் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்கு இந்தமேடையை பயன்படுத்திக்கொள்வார்.
2000க்கும் மேல் பிரதிநிதிகள்
யுனைடெட் எகனாமிக் அமைப்பு தலைவர், அஹமது ஏ.ஆர்.புஹாரி கூறுகையில், 8க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சிந்தனை வாதிகள் என 2000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்று கூட்டிய 2015-ல் நடைபெற்ற முதல் உச்சிமாநாட்டின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது. உச்சிமாநாட்டின் முந்தைய பதிப்பில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மற்றும் ரூ.2400- கோடிக்கு மேற்பட்ட மதிப்பில் வர்த்தகம் உருவாக்கப்பட்டது. முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு சென்ற பதிப்பைவிட அதிக கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனைவாதிகளை பங்கேற்குமாறு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுக்குள் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பதன் மூலமும் இந்த உச்சிமாநாட்டின் வழியாக ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்திற்கு உதவுவதில் நாங்கள் பெருமிதமடைகிறோம். 2030-ம் ஆண்டு முடிவிற்குள் 5% -லிருந்து7.5%-ற்கு தமிழ்நாட்டின் ஜீடிபிக்கு பிற்பட்ட சமுதாயத்தின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதும் இதன் நோக்கமாகும்,”என்றார்.
ஒருங்கிணைப்பாளர்  ரசாக்
ஒருங்கிணைப்பாளர் எம். ரசாக் கூறுகையில், 2வது முறையாக யுஇஎப்–வர்த்தக உச்சிமாநாட்டை 2017-ல் ஏற்பாடுசெய்து நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த உச்சிமாநாட்டின் முக்கியத்துவமும் மற்றும் பெரிய அளவிலான தன்மையும் பிசினஸ் சமூகத்தினரை நெருக்கமாகக் கொண்டுவருகிறது. கருத்தரங்கில் பங்கேற்கும் சிந்தனை சிற்பிகள், முந்தைய ஆண்டில் நாங்கள் பெற்ற எமது வெற்றிக்கு சாட்சியமாக இருப்பார்கள். இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு உதவக்கூடிய புதிய, தனித்துவமற்றும் புதுமையான யோசனைகளை (யுஇஎப்) ஐக்கிய பொருளாதாரமன்ற சமுதாயத்திற்குள் கொண்டுவருவது எங்கள் நோக்கமாகும்.
இதன் தலைமை இயக்குநர் டபுள்யு. எஸ்.ஹபீப் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மிகநவீன முன்னேற்றங்கள், உருவாகிவரும் பிரச்சினைகள் மற்றும் மாறிவரும் இயங்கியல் மீது தொழில்துறையின் சகபணியாளர்களுக்கிடையே ஆழமான கலந்துரையாடல் மற்றும் உயரளவிலான சிந்தனைகளின் பரிமாற்றத்தில் ஈடுபட இந்த ஆண்டு நடைபெறும் கருத்தரங்கு ஒரு சிறந்தவாய்ப்பை வழங்கும். நடைமுறைப்படுத்தக்கூடிய விளைவுகளை வடிவமைக்கிற உதவுகிறகுழு கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்புடைய பல்வேறுதலைப்புகள் மீதான பகிர்வுகளை வழங்குகிறவாறு பிரபலமான நிபுணர்கள் பங்கேற்கின்ற குழு விவாதங்களும் இதில் இடம்பெறும்.
‘தொழில்முனைவு’, ‘பிசினஸ் மற்றும் பொருளாதாரத்தில் சமூகம்’, ‘கலைமற்றும் கலாச்சாரம்’, ‘புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்’ மற்றும் ‘கல்விரூதிறன் மேம்பாடு’என்பவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளமுக்கியதலைப்புகளுள் சிலவாகும்.
‘எதிர்காலத்தை வடிவமைக்கிற பொருளாதார போக்குகள்’, ‘வெற்றிகரமான தொழில் முனைவோரின் அனுபவங்கள் – வாய்ப்புகளும், சவால்களும்’, ‘இந்திய தொழில்துறைக்கான நிதி மற்றும் முதலீடு விருப்பத் தேர்வுகள்’ மற்றும் ‘தொழில் செயல்பாடுகளை மாற்றியமைக்கிற தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்’ போன்ற தலைப்புகள் மீது இக்கருத்தரங்கானது, பயனுள்ள பல தகவல்களை வழங்கும்.
2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு, மதிய உணவு, வணிகப் பொருட்கள் மற்றும் வலையமைப்புக்கான நுழைவு உட்பட இதற்கான அனுமதிச்சீட்டுகளை பெற பதிவு செய்வதற்காக http://ueftradesummit.com/register. – ஐ தொடர்பு கொள்ளலாம்.