பரோடா வங்கியில் வாங்கும் அனைத்து வீட்டு வசதி கடனுக்கும் 8.30% வட்டி

சென்னை, நவ.14–
இந்தியாவில் முதன்மையான பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான பேங்க் ஆப் பரோடா மிகவும் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுகடன் வழங்குகிறது. தற்போதைய ஒரு வருடகால எம்.சி.எல்.ஆர். ( குறு விலை நிதி அடிப்படையிலான கடன் விகிதங்கள்), அதாவது 8.30% வட்டியில் வீட்டுக்கடன்களை வழங்குகிறது.
வீட்டுக்கடன் தொகை மற்றும் கடனின் காலவரையறை எதுவாக இருப்பினும் மேற்கூறிய வட்டி விகிதமே பொருந்தும்.
மற்ற வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களில் உள்ள வீட்டு கடன்களை இவ்வங்கியில் மாற்றிக்கொள்வர்த்தற்கும் இதே வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
2017 ஜனவரி ல் இவங்கியானது மற்ற வங்கிகளுக்கு முன்னோடியாக இருந்து வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பின்னரே மற்ற வங்கிகளும் அதை பின்பற்ற தொடங்கின. இந்த வங்கியில் வீட்டுக்கடன் பெறுபவரின் சி.ஐ.பிஐ.எல் மதிப்பெண் 760 மற்றும் அதற்கு மேல் இருப்பின் வங்கியானது அந்த கடனாளியின் வட்டி விகிதம் ஒரு வருட எம்.சி.எல்.ஆர். க்கு உட்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.
தற்போது மற்ற வங்கிகளில் வீட்டுக்கடன்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த வட்டி விகிதமானது. வேலை பார்க்கும் பெண்கள் அல்லது சுயதொழில் புரிவோர் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு / குறிப்பிட்ட கடன்தொகைக்கு மட்டும் பொருந்தும். ஆனால் இந்த வங்கியில் வீட்டுக்கடனிற்க்காக வழங்கப்படும் மேற்குறிப்பிட்ட வட்டி விகிதம் எவ்வித கடன் தொகை உச்ச வரம்பின்றி அனைத்து வகையினருக்கும் (வேலை பார்ப்போர் மற்றும் சுயதொழில் புரிவோர்) வீட்டுக்கடனின் கால வராயறை 30 வருடங்கள் வரையுள்ள கடங்களுக்கு பொருந்தும்.