சுவாச சோதனைகள் மூலமே மலேரியாவை கண்டறியலாம்!

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம், மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரிய வந்துள்ளது.
இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கனவே ஆஃப்ரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளிடையே இச்சோதனையை முயற்சித்த போது சரியாக இருந்தாலும், வழக்கமான செய்முறையாக இதனை மாற்றுவதற்கு இந்த சோதனையை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
இந்த சோதனைக் கருவி மூலம், முகரப்படும் ஒரு வித மணமும், மலேரியாவை பரப்பும் பூச்சிகளை ஈர்கக்கூடிய இயற்கை மணமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.
பைன் மரங்கள் மற்றும் ஊசியிலை மரங்கள் வெளியிடக்கூடிய டெர்பைன்சபானது, கொசுக்கள் மற்றும் மகரந்த சேர்க்கை செய்யும் வேறு சில பூச்சிகளை வரவழைக்கும் என செய்ன்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மலேரியா பாதிப்பு உள்ளவர்களின் சுவாசத்திலும் இதே மணம் இருக்க, அது கொசு உள்ளிட்ட மற்ற பூச்சிகளை ஈர்க்கும் பட்சத்தில் அவை மற்றவர்களை கடிக்கும் போது பலருக்கு மலேரியா பரவ வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த சோதனை மேலும் கட்சிதமாக இருந்தால், மலேரியா நோயை கண்டறிய இதுவே புதிய மலிவான மற்றும் எளிமையான வழியாக அமையும் என பேராசிரியிர் ஆட்ரி ஓடம் ஜான் மற்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்த பரிசோதனை செய்வதென்பது விலை உயர்ந்ததாகவும், கிராமப்புற பகுதிகளில் சவால் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. இரத்த மாதிரிகள் தேவைப்படாத அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த முறை சிறந்த நன்மை பயக்கக்கூடும்.
இந்த சோதனை முறையை நம்பகத்தன்மை உள்ளதாக மாற்ற, மேலும் சில வேலைகளை செய்வதற்கான தேவை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.