கோரிப்பாளையம் பேருந்து நிலையத்தில் டெங்கு ஒழிப்பு பணி

மதுரை,நவ.14–
மதுரை கோரிப்பாளையம், மேலமடை , அண்ணாபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் டெங்கு ஒழிப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்.
கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் நீல நிற டிராம்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். மேலும் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தேநீர் கடைகளையும் உடனடியாக அப்புறத்தப்படுத்த உத்தரவிட்டார்.
மேலமடை பகுதியில் மாநகராட்சி கமிஷனர் வீடு வீடாக சென்று வீட்டில இருந்த குளிர்சாதன பொட்டியையும், பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அப்பபுறப்படுத்த உத்தரவிட்டார்.
அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் பெட்டி கடையில் நீல நிற டிரம்மில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் டெங்கு கொசு புழு இருப்பது கண்டறியப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்த ஆய்வின் போது உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், கண்காணிப்பு பொறியாளர் சுகந்தி, உதவி கமிஷனர் பழனிச்சாமி, மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.