குறிக்கோள்

அன்புமணி அதிகாலையில் எழுந்து அன்றாட கடமைகளை முடித்து கல்லூரிக்குள் நுழைந்தான். நேராக வகுப்பறைக்குள் தான் செல்வான் வழியில் நண்பர்கள் குட்மார்னிங் சொல்வார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக சொல்வார்கள். மெல்லிய இளஞ்சிரிப்புடன் தலையை அசைத்துவிடுவது வழக்கம்.
கல்லூரியில் வகுப்பு அல்லது பரிசோதனைக் கூடம் நூல் நிலையம் என்ற மூன்று இடங்களில் தான் மணியைக் காணமுடியும். அழகிலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவன் அவன் அழகை ரசிக்க நினைக்கும் பெண்கள் நூல் நிலையத்தில் அவனுக்கு எதிராக ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அவனயே நோக்கி ரசிப்பார்கள். அறிவில் ஈடுபாடுடைய ஆண்களும் பெண்களும் அவன் படிக்கும் புத்தகத்தை படிக்க நினைப்பார்கள்.
மின்சாரத்திலிருந்து வெப்பத்தை வெளிப்படுத்துவது போல வெப்பத்திலிருந்து மின்சாரத்தை நேரடியாக உண்டாக்கும் திட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்தி ஆராய்ச்சி செய்து தான் வாழ்வின் குறிக்கோளாக நினைத்துத்தான் கல்லூரியில் சேர்ந்தான் அன்புமணி. கேண்டீனுக்கு மரத்தடி மைதானத்திற்குச் சென்று அரட்டை அடிப்பது என்ற பழக்கம் இல்லாதவன்.
உலக யோகா தினத்தன்று முன் வந்து யோகா பயிற்சியை அளித்த போது அவன் உடற்கட்டில் ஈர்ப்பு கொண்டவர்கள் அதிகம். சில பெண்கள் அவனை எப்படியாவது அடைய வேண்டும் என்றும் சில ஆண்கள் அவனுடன் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்யவேண்டுமென்றும் முடிவெடுத்து அவனுடன் பழக ஆரம்பித்தனர்.
அன்புமணியின் தந்தை அப்பர்சாமிகள் புரோகிதம், அர்ச்சனை, பணிகள் செய்து வருபவர் ஆனால் அன்புமணி நண்பர்களுடன் கோவில், சர்ச் , பள்ளிவாசல், புத்த விஹார் ஆகிய எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் செல்வது வழக்கம். எல்லா தெய்வங்களும் ஒரு சக்தி உடையவர்கள் என்ற நம்பிக்கை. மணிக்கு மூன்று மாணவிகள் அவன் எப்படியாவது காதலித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கனவில் அவன் அடைவது பொழுதுபோக்காக வைத்திருந்தனர். ஒரு நாள் ஒவ்வொரு பெண்ணும் தான் ஆபத்தில் சிக்கி இருப்பதாகச் சொல்லி ஒரு இடத்திற்கு ஒரு நண்பரின் போன் மூலம் வரச் சொல்கின்றனர். மூன்று பெண்களும் ஓரே இடத்தை சொல்லி விட்டனர்.
உண்மை என்று நம்பி மணியும் அந்த இடத்திற்கு தனியாக சென்றான். உள்ளே சென்றதும் ஒவ்வொருவராக அவன் தனியாக அழைத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்துகிறார்கள். அவன் மறுக்க, பெண்கள் வெறி கொண்டு அவனை பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். உடன் படாததால் அவனை கொலை செய்கின்றனர்.
போலீஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது.  அந்த நண்பனின் செல்போன் அழைப்பை பார்த்து யார் அந்த மூன்று பெண்கள் என்று ஊர் ஜிதம் செய்கிறது.
போலீஸ் அருகில் சென்று பார்த்தால் வசதியான பணக்காரக் குடும்பம்; மேல்நாட்டு நாகரீகத்தில் வாழும்
குடும்பம் ;பணத்தை வைத்து எதையும் சாதிக்க முடியும் என்ற அகந்தை கொண்டவர்கள் என தெரிந்தது.
காவல் துறை விசாரணையின் வேகத்தைத் திருப்பியது. அப்பர் சாமிகள் என்ன செய்வதென்று புரியாமல் தினமும் கோவிலில் ஆண்டவனிடம் முறையிட ஆரம்பித்தார்.
ஒரு பெண்ணின் தந்தை மரணமடைகிறார். ஈமக்கிரியை செய்ய வந்த வாத்தியார் பெண்ணை சரியாக வளர்க்கத் தெரியாத குடும்பத் தலைவனுக்கு ஆண்டவன் தண்டனை என்று சொல்லி அவர் ஆத்மா சாந்தி அடையப்படும் என்று  கூறிச் சென்றார்.
அந்தப் பெண் தான் தான் இந்த பாவத்திற்கு காரணம் என்று எண்ணி என்ன செய்வதென்று குழப்ப நிலையில் இருந்தாள்.
இதே மாதிரி இரண்டாவது பெண்ணின் தாயும் இறக்க கல்லறைத் தோட்டத்தில் இறுதி சடங்கு செய்ய வந்த பாதிரியாரும் இரங்கற் செய்தியில் பெண்ணை ஒழுக்கமாக வளர்க்க முடியாத தந்தைக்கு இறைவன் அளித்த தண்டனை என்று கூறினார்.
அந்தப் பெண்ணும் தன் தோழியிடம் சென்று நாம் இனிமேல் வாழ்வதில் பயன் இல்லை ;தற்கொலை செய்து கொள்வோம் என்று முடிவு செய்யும் போது மூன்றாவது தோழி ஆறுதல் சொல்லி அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் . வீட்டில் தங்கியவர்கள் அதிர்ச்சி அடையும் நிலையில் அடுத்த நாள் மூன்றாவது பெண்ணின் தாயும் தந்தையும் இறக்கிறார்கள்.
காவல் துறையின் கவனம் முவரின் பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்று தீவிர விசாரணையை மேற்கொள்ள ஆரம்பிக்கிறது.
மூன்று இறுதிச் சடங்குகளையும் செய்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவரும் ஆன்மீக முறைப்படி காரணங்களைச் சொல்ல போலீஸ் யோசனை செய்ய ஆரம்பிக்கிறது.
பெற்றோர்களை இழந்த மூன்று மாணவிகளும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து கடற்கரைக்குச் செல்கின்றனர்.
அங்கு அப்பர் சாமிகள்.
சிறிது நேரம் நின்று கவனித்த மூவரும் அவர் அறிவுறைப்படி தற்கொலை எண்ணத்தை கைவிட்டு குறிக்கோளுடன் வாழ முடிவெடுத்து பிரம்ம குமாரிகள் இயக்கத்தில் சேர்கின்றனர்.

கோவிந்தராம்